எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனே, ஜூலை 23 புல்தானா ஜில்லா பரிஷத் தேர்தலில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது தாமரைச்சின்னத்திற்கு சென்றது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஆம் முறைகேடு நடந்தது உண்மை தான்!' என்று மாவட்ட ஆட்சியாளர் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை விடுத்திருந்தார். ஆனால்  தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பாஜகவிற்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது.

மகாராட்டிரா மாநிலம் புல்தானா மாவட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போது சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு கருவியில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது தாமரைச் சின்னத்திற்கே விழுகிறது என்றும், கைச்சின்னம், சுயேட்சையின் இளநீர் சின்னம், சைக்கிள், ஒலிமணி, ஏணி போன்ற சின்னங்களுக்கு வாக்களித்தால் தாமரைச்சின்னத்திற்கே விழுகிறது என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இது போன்ற மோசடிமூலம் மகா ராட்டிராவின் அனைத்து மாவட்ட ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜகவானது வெற்றி பெற்றுள்ளது.  
ஆதாரங்களுடன் புகார்

இந்த மோசடி தொடர்பாக சுயேட்சைவேட்பாளர் அஷா தாயீ அருண்சோரே கூறியதாவது,  "நான் புல்தானா மாவட் டத்தின் ஜில்லா பரிஷத் தேர்தலில் சுல்தான்பூர் லானோர் நகர பிரதிநிதி பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறேன், எனக்கு இளநீர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது, எங்கள் நகரத்தின் 56-ஆவது வாக்குச் சாவடியில் நான் வாக்களித்தேன். வேட் பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் எனது பெயரும், முதலி டத்தில் எனது சின்னமும் உள்ளன.

என்னுடைய வாக்குச்சாவடியில் காலை 10-மணிக்குச் சென்று நான் வாக்களித்தேன்; என்னுடைய பெயரும், சின்ன மும் முதலிடத்தில் உள்ளதால் நான் என்னுடய சின்னமான இளநீருக்கு வாக்களிக்க பொத்தானை அழுத்தினேன், ஆனால் எனது சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் உள்ள சிறிய மின்விளக்கு எரிவதற்குப் பதிலாக 4 ஆம் இடத்தில் உள்ள தாமரைச் சின்னத்திற்கு வாக்கு விழுந்ததன் அடையாளமாக அங்கு மின்விளக்கு எரிந்தது, நான் உடனடியாக அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன், ஆனால் அவர் தொழில் நுட்ப கோளாறு இருக்கும், அது விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து வாக்களித்த பலர் கைச் சின்னத் திற்கும், ஏணிச் சின்னத்திற்கும், சைக்கிள் மற்றும் ஒலிமணி சின்னத்திற்கு வாக்களிக்கும் போது தாமரைக்கே விழுவதாகத் தொடர்ந்து புகார் கூறினர். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி யின் கண்காணிப்பு அதிகாரியான ராம்நாராயண் சாவந்திடம் அனைத்து கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களது புகாரை ஏற்று மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியாளருமான அனில் கோலாட்டின் பார்வைக்கு கொண்டு சென்றார். அவரும் உடனடியாக வாக்குப் பதிவு மய்யத்திற்கு வந்து மின்னணு கருவியை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் குறிப்பிட்ட ஒரு சின்னத்தின் அருகில் உள்ள பொத்தானை அழுத்தினால் 4-ஆம் எண்ணில் உள்ள பாஜகவின் தாமரைச் சின்னத்திற்கே வாக்கு விழுந்ததாக அங்கு மின்விளக்கு எரிந்தது,   இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட வாக்குப் பதிவு கருவியை சீலிட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார். ஆனால் கருவியில் எப்படி எந்த சின்னத்திற்கு பொத்தானை அழுத்தினாலும் அது தாமரைச்சின்னத்திற்கே விழுவது பற்றி எதுவும் கூறவில்லை" என்று அந்த சுயேட்சை வேட்பாளர் கூறினார்.

இதனை அடுத்து அங்கு பிப்ரவரி 21-ஆம் தேதி மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. இந்த குளறுபடி தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் "ஜில்லாபரிஷத் தேர்தலின் போது வாக் குப் பதிவு கருவியில் முறைகேடு நடந்திருப்பது உண்மைதான்; இருப்பினும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் கூறவேண்டும் என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் மவுனம்!

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்ட போது "மின்னணுக் கருவியில் முறைகேடு நடந்துள்ளது உண்மைதான் என்று மாவட்ட தேர்தல் தலைமைக் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியாளரும் எங்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். மின்னணு கருவிகளில் இது போன்ற சில சிக்கல்கள் ஏற்படும், இந்த குறைகளை சரிசெய்ய தனியாக ஒரு குழுவை நியமித் துள்ளோம்" என்று பதில் அளித்துள்ளது.

இந்த ஆண்டு நடந்து முடிந்த மகாராட்டிரா மாநில ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக அனைத்து ஜில்லா பரிஷத்துகளையும் கைப்பற்றியுள்ளது. சென்ற முறை ஒரு இடங்களைக் கூடப்பெறாத பாஜக இம்முறை அனைத்து ஜில்லா பரிஷத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஜில்லாபரிஷ்த் தலை மையைக் கைப்பற்றியுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு கருவி யில் முறைகேடு செய்து பெற்ற வெற்றி என்பது கண் கூடாகத் தெரிந்தும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது!

நாந்தேடு ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 23, காங்கிரஸ் கூட்டணி 20, சுயேட்சை 2

பீட் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 24, காங்கிரஸ் கூட்டணி 27, சுயேட்சைகள் 8

ரத்தினகிரி ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 39, காங்கிரஸ் கூட்டணி 16

சந்தரப்பூர் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 33, காங்கிரஸ் கூட்டணி 20

புல்தானா ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 32,  காங்கிரஸ் கூட்டணி 23

அவுரங்காபாத் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 32, காங்கிரஸ் கூட்டணி 19

இங்கோலி ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 25, காங்கிரஸ் கூட்டணி 20, சுயேட்சைகள் 5

யவத்மால் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 38, காங்கிரஸ் கூட்டணி 22

ஜலகாவ் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 44, காங்கிரஸ் கூட்டணி 15

லாத்தூர் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 36, காங்கிரஸ் கூட்டணி 20

உஸ்மானாபாத் ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக கூட்டணி 22, காங்கிரஸ் கூட்டணி 21, சுயேட்சைகள் 4

வார்தா ஜில்லா பரிஷத் தேர்தலில் பாஜக 29, காங்கிரஸ் 15.

இந்த ஆண்டு நடந்த ஜில்லா பரிஷ்த் தேர்தல் முடிவுகளே மேலே உள்ளவை. இதில் பாஜக அனைத்து இடங்களிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது, பெரும்பான்மைக்கு குறைவாக வெற்றிபெற்ற இடங்களில் சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு அங்கும் ஜில்லா பரிஷத் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளது.

எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜவுக்கே ஓட்டு விழும்.. புதிய வாக்கு இயந்திரம் வடிவமைப்பு..

இதே போல் கடந்த மார்ச் மாதம் மத்தியப்பிரதேசம் இடைத் தேர்தலின் போது அடர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் கண் காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியாளருமான சலீனாசிங் வாக் குப் பதிவிற்கு கொண்டு செல்லப்படும் முன்பு ஒரு மின்னணு வாக்குப் பதிவு கருவியை சோதனை செய்தபோது எந்த பொத் தானை அழுத்தினாலும் அது பாஜகவின் தாமரைச் சின்னத் திற்கே வாக்கு விழும்படி திருத்தி அமைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.   உ.பி. சட்டமன்ற தேர்தலின் போது தேவார் சட்டமன்றத்தில் அனைத்து வாக்குகளுமே பாஜக வேட்பாள ருக்கு விழுந்தது, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள் ளிட்ட 108 வேட்பாளர்களுக்கும் ஒரு வாக்குகூட விழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த இரண்டு நிகழ்விற்கும் தேர்தல் ஆணையம் இது வரை சரிவர பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner