எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜூலை 24 மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் நீதி பதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்குள்ள இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதாலத்) நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே திருநங்கை நீதி பதியாகி இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

இவரது பெயர் ஜோயிதா மண்டல். கொல்கத்தாவை சேர்ந் தவர். 2009-ஆம் ஆண்டு இவர், கொல்கத்தாவில் இருந்து சிலி குரிக்கு ரயிலில் பயணம் செய்தார். ஆனால், இடம் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ் லாம்பூரில் இறங்கி விட்டார்.

பின்னர் அங்கேயே அவர் நிரந்தரமாக தங்கினார். அங்கு திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார். தினாஜ்பூர் புதிய விளக்கு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தின் மூலம் பல் வேறு சமூக பணிகளில் ஈடு பட்டார். திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகளையும் பெற் றுக் கொடுத்தார். அவருடைய சமூக பணிகள் காரணமாக தற் போது நீதிபதி பதவி வழங்கப் பட்டுள்ளது. அவர் தலைமை யில் நடந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மூலம் வங்கி கடன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

நீதிபதியாக நியமிக்கப்பட் டது குறித்து ஜோயிதா மண்டல் கூறியதாவது:-

நான் இந்த பதவிக்கு வந்தி ருப்பதன் மூலம் திருநங்கைகள் சமூகத்துக்கு இன்னும் நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கி றேன். திருநங்கைகள் முன் னேற்ற இன்னும் பல பணி களை அரசு செய்ய வேண்டும்.  அவர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். திருநங்கைகளை பொருத்தவரை அவர்கள் அதிகம் படிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அரசு துறை களில் உடல் ரீதியாக செய்யப் படும் குரூப்-டி பணிகளை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு அரசு துறையி லும் ஒரு திருநங்கைக்கு உயர் பதவி கிடைத்தால் கூட அவர்கள் மூலம் இந்த சமூகம் முன்னேற்றம் அடையும். எனவே, அனைத்து துறைகளி லும் அவர்களுக்கு உயர் பதவியும் வழங்க வேண்டும்.

இதேபோல் தனியார் துறை களிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரவேண்டும்.  என்றார் அவர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner