எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தூர், ஜூலை 24 மத்தி யப்பிரதேசத்தில் உள்ள மார்க் கெட் ஒன்றில் தக்காளி திருட்டை தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளியின் விலை கடுமை யாக உயர்ந்து உள்ளது. அங்கு தக்காளி கிலோ ரூ. 100-இல் இருந்து ரூ.120 வரை விற்கப் படுகிறது.

இதனால் மார்க்கெட்டில் விற்கும் சில வியாபாரிகள் காவல்துறையினரின் தகுந்த பாதுகாப்போடு தக்காளியை விற்பனை செய்கிறார்கள். தக் காளி திருடு போகாமல் தடுப் பதற்காக அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.   
இதனிடையே கடந்த 20ஆம் தேதி மகாராட்டிர மாநி லம் மும்பை தஹிசர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் இருந்து 300 கிலோ தக்காளி திருடப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner