எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெர்மனியில் நடைபெற உள்ள பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்பதற்குமுன் திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களை இன்று (24.7.2017) சந்தித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். பேராசிரியருக்கு சால்வை போர்த்தினார்; அந்தச் சால்வையைக் கழகத் தலைவருக்கே அணிவித்து மாநாட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மாநாட்டின் விவரங்களை கழகத் தலைவர் எடுத்துக் கூறினார். உங்களால் மட்டுமே இந்த சாதனையைச் செய்ய முடியும் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துத் தெரிவித்த பேராசிரியர் அவர்கள், இடைஇடையே கழகத் தலைவரின் கைகளை ஆறு முறை குலுக்கிக் குலுக்கி தன் ஆனந்தத்தைப் பெருமிதமாகப் புலப்படுத்தினார். கழகப் புதிய வெளியீடுகளையும் பேராசிரியருக்கு அளித்து விடை பெற்றார் கழகத் தலைவர். உடன் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்றிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner