எழுத்துரு அளவு Larger Font Smaller Font"இடையர் சாதியைச் சேர்ந்த வர்கள் நாங்கள். எங்கள் சாதி யில் பிறந்த குழந்தைகளை கல்வி கற்கப் பள்ளிக்கு அனுப் பினால், சரஸ்வதி அவர்களைக் கொன்று விடுவாள் என்ற தீவிரமான நம்பிக்கை இருந்தது. என் பெற்றோரும் அப்படியே நம்பினார்கள். அதனால் என் பாட்டி எங்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்."

"நர்சிம்பேட்டை என்ற ஊரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் சேர்வதற்காகச் சென் றேன். பள்ளியின் தலைமை ஆசிரியர்  என்னை எட்டாம் வகுப்பில் அனுமதித்து, சீட்டு ஒன்றைக் கொடுத்து, வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்கச் சொன் னார். நான் வகுப்பிற்குச் சென்று அவரிடம் ஒப்படைத்து விட்டு நின்றேன். அவர் சீட்டைப் பார்த் தார்; என்னையும் பார்த்தார். "இங்கே பார்! இந்த அய்லய்யா, மல்லையா, பொன்னையாக் களுக்கெல்லாம் என் வகுப்பில்  இடமில்லை; உங்களுக்கெல் லாம் படிக்கவோ, எழுதவோ வராது. என் வகுப்பில் நீங்களெல் லாம் ஒரு சுமையாக இருப் பீர்கள்; தலைமையாசிரியர் எதற்காக இவர்களையெல்லாம் என் தலையில் கட்டுகிறார்?" என்று அலுத்துக் கொண்டார்."
"நான் மிகுந்த துயரத்துடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். அவர் எங்களுக்கு இந்தி ஆசிரியர். அடுத்த மூன்றாவது மாதத்தில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடைத்தாள்களைக் கொடுக்கும்போது, என் விடைத் தாளை கையில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். "ஓ! நீ நிறைய மதிப்பெண்களை எடுத்திருக்கிறாய்! வகுப்பில் முதலாவதாக வந்திருக்கிறாய்! உன்னைப் போன்ற ஒருவன் வகுப்பில் முதல் மாணவனாய் வருவான் என்று நான் எதிர் பார்க்கவில்லை" என்றார்.

1956இல் அம்பேத்கர் "புத்த ரும் அவர் தம்மமும்" பதிப் பித்தபோது அவரிடம் பண மில்லை. அதற்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் வருத்தத்திற்குரிய விஷய மென்னவென்றால், அம்பேத்கர் நேருவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதினார். அப்போது முக்கிய மான உலகப் பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆதலால் புத்தகத்தை அச்சிடும் செலவுக்கான தொகை கிடைத்தால் உடனடியாக அச்சிட்டு, மாநாட்டுக்கு வரும் புத்த மதப் பெரியவர்களுக்கு அதை வழங்கலாம் என்கிற யோசனையில் கடிதம் எழு தினார். அந்தக் கடிதத்தை சர்வ பல்லி ராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார். ராதாகிருஷ் ணனோ அந்தத் தொகையை வழங்க மறுத்தார்.

இத்தனை அரிய தகவல் களும் "இந்து ஆன்மிகமே பாசிசம்தான்" என்ற நூலி லிருந்து... இதன் ஆசிரியர் காஞ்ச அய்லய்யா ஆந்திர மாநிலம் உஸ்மானியா பல்கலைக் கழகத் தின் அரசியல் துறைத் தலைவர் இவர்!

இந்த எடுத்துக்காட்டுகளுக்கு விளக்கவுரை தேவையில்லை. ஆனாலும் உண்மை நிலையை அசைப் போடுங்கள்; உண்மை மிக ஆழமாகவே புரியும்!      

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner