எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கட்டா, ஜூலை 13 அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொரு ளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த் தியா சென் பற்றிய ஆவணப்பட மான தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத் துக்கு தணிக்கை துறை அதி காரிகள் கெடுபிடி விதித்தனர். ஆவணபடத்தில் இடம் பெற்றி ருக்கும் பசுமாடு, இந்துத்துவா, குஜராத் ஆகிய வசனங்களை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று கொடுக்க முடியும் என தணிக்கை துறை தெரிவித்ததை யடுத்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமர்த்தியா சென் தெரிவித்த தாவது: தணிக்கைத் துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றது. அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது. இவ்வாறு ஆளும் பா.ஜ., அரசு மீது அமர்த்தியா சென் குற்றம் சாட்டினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner