எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, ஜூலை 25 சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழா ஜெர்மனியில் மூன்று நாள் விழாவாக வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறுகின்றது.

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் இம்மாதம் 27,28,29 ஆகிய மூன்று நாள்களில் சுயமரியாதை இயக்கத்தின் (1926) 91ஆம் ஆண்டு நிறைவு விழா பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் கிளை ஏற்பாட்டின்பேரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பன்னாட் டளவில் அறிஞர் பெருமக்கள், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

முதல் நாள் நிகழ்வு: விழா தொடக்கம்

கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் ‘அல்டே பொட்டானிக்’ ஜிர்ஹாப்ஸ்டர், 15 ஹார்ஸல் ஙீஙீஙீமி அரங்கில் மூன்று நாள்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல் நாள் அன்று (27.7.2017- வியாழக்கிழமை) மாலை விழா தொடங்குகிறது. மாலை 4.30 மணியளவில் பெரியார் பன் னாட்டு மய்யம்,  ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்புரையாற்றுகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், தமிழர் தலைவர் டாக்¢டர் கி.வீரமணி தலைமையில் பிரிட்டன் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.

புத்தக வெளியீடு

தந்தை பெரியார் எழுதிய கடவுளும் மனிதனும் -  ஜெர்மன் மொழியாக்க நூல் (பேரா.கிளாடியா வெப்பர்), பெரியார் ஈ.வெ.ராமசாமி - வாழ்க்கைச் சுருக்கம் - ஜெர்மன் மொழியாக்க நூல் (ஸ்வென் வொர்ட்மேன்), பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய  பெரியார் சுயமரியாதை - ஆங்கில நூல்,   பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன் மொழிகள் - தமிழ் & ஆங்கில நூல், பெரியார் சுயமரியாதை இயக்கம் (‘ரிவோல்ட்’ (1928 & 1929) ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆங்கில நூல்) ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், அமெரிக்கா - மேரிலேண்ட் டாக்டர் சித்தானந்தம் சதாசிவம் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாக முதல் நாள் நிகழ்வின் சிறப்புரையாற்றுகிறார். மாலையில் ‘பெரியார்’ படம் திரையிடப்படுகிறது.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் நிகழ்வு 28.7.2017 - வெள்ளிக்கிழமை காலை 9.30மணி முதல் முற்பகல் 11 மணி முடிய நடைபெறுகின்ற ஆய்வுக்கட்டுரை அரங்கத்தின் முதல் அமர்வு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தொடங்குகிறது.

பேரா. டாக்டர் எஸ்.எஸ்.சுந்தரம்  சுயமரியாதை: சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி  எனும் தலைப்பிலும், பேரா. டாக்டர் பீட்டர் சால்க்  சுயமரியாதை  எனும் தலைப்பிலும், டாக்டர் சிர்.உன்ரா  பகுத்தறிவு,  விமரிசனம் மற்றும் வீரிய அரசியல் செயல்பாடு களில் அரசர் வெளிப்படையாக இருக்கிறார்Õ எனும் தலைப் பிலும்  ஆய்வுக் கட்டுரைகளை முதல் அமர்வில் வழங்கு கிறார்கள்.

ஆய்வுக்கட்டுரை அரங்கம்  இரண்டாம் அமர்வு முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகிறது.

ஸ்வென் வொர்ட்மன்  வரலாற்றுக் காலங்களில் இந்தியாவில் பகுத்தறிவு  எனும் தலைப்பிலும், பேரா. டாக்டர் உல்ப் காங்க் லைட்டோல்டு  அரசியல் அமைப்பு சாசனம் - அய்ரோப்பிய அரசியல் எண்ணங்கள் எனும் தலைப்பிலும், டாக்டர் எஸ்.ஜே.இமானுவேல்  சுயமரியாதையும் மானுடமும்  எனும் தலைப்பிலும்,   டாக்டர் த.ஜெயக்குமார்  சுயமரியாதைக் கோட்பாடு - பெரியாரின் மனித நேயப் பார்வை  எனும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகிறார்கள்.

ஆய்வுக்கட்டுரை அரங்கம்  மூன்றாம் அமர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி முடிய  டாக்டர் இலக்குவன் தமிழ் தலைமையில் நடைபெறுகிறது.

டாக்டர் சரோஜா இளங்கோவன்  பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும்Õ எனும் தலைப்பிலும், பேரா. டாக்டர் எஸ்.தேவதாஸ்  பெரியார் சுயமரியாதை இயக்கம் சமூக மாற்றத்திற்கான கருவிÕ எனும் தலைப்பிலும், வீ.குமரேசன்  நாத்திக தத்துவ அறிஞர்கள்: பிரெட்ரிக் நீட்சே மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி - ஓர் ஒப்பீட்டு ஆய்வு  எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்குகின்றனர்.

கலந்துறவாடல் களம்
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி முடிய தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கலந்துறவாடல் நிகழ்வு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்தாய்வினை    தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். குவைத் நாட்டில் இயங்கிவருகின்ற புரட்சி மேதை தந்தை பெரியார் நூலகÕத்தின் பொறுப்பாளர் ராவண காவியப் பாவலர் லதாராணி  சமூகப் புரட்சி - 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்கள் - நடைமுறை ஆக்கங்கள்  எனும் தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். ஆய்வுரையைத் தொடர்ந்து பேராளர்கள் கலந்தாய்வுக்களத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

மூன்றாம் நாள்

சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் (29.7.2017, சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி முடிய ஆய்வுக்கட்டுரை அரங்கத்தின் நான்காம்  அமர்வு பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் தலைமையில் நடைபெறுகிறது.

வழக்குரைஞர் அ.அருள்மொழி  பெரியார் - சுயமரியாதை: இந்திய வரலாற்றில் ஓர் எழுச்சிமிகு தாக்கம்’ எனும் தலைப் பிலும், எம்.விஜயானந்த்  தென்னிந்தியாவில் சுயமரியாதை      இயக்கத்தின் விளைவு ஆக்கம் எனும் தலைப்பிலும், ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன்  சமூகநீதி  எனும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகிறார்கள்.

ஆய்வுக்கட்டுரை அரங்கத்தின் அய்ந்தாம் அமர்வு முற்பகல் 11.30 - பிற்பகல் 1.00 மணி முடிய மைக்கேல் செல்வநாயகம் தலைமையில் நடைபெறுகிறது. லதாராணி பூங்காவனம்  தென்னிந்தியாவில் பாலினச் சுரண்டலும் - சுயமரியாதை  இயக்க எழுச்சியும்Õ எனும் தலைப்பிலும், ஆ.கலைச்செல்வன்  மாணவரும் சுயமரியாதையும்  எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்குகிறார்கள்.

இளைஞர்களுக்கான பன்னாட்டு
கட்டுரைப் போட்டி - பரிசளிப்பு

மாநாட்டினையொட்டி அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யம் இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப் போட்டியினை நடத்தியுள்ளது.

பெரியார் மனிதநேயம் -  வருங்கால மானுடம்
சுயமரியாதை இயக்கமும், கிடைத்த பலன்களும்

பெண்கள் அதிகாரத்துவமயம்

ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் பெறப்பட்டது. முதல் பரிசு 500 டாலர், இரண்டாம் பரிசு 300 டாலர், மூன்றாம் பரிசு 200 டாலர் வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றிபெற்றோர் விவரம் மாநாட்டில் வெளியிடப்படும்.
கி.வீரமணி - சமூகநீதி விருது வழங்கும் விழா

மூன்று நாள்கள் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிறைவாக,  கி.வீரமணி - சமூகநீதி விருதுÕ வழங்கும் விழா பிற்பகல் 1.45மணி முதல் பிற்பகல் 3.15 மணி முடிய நடைபெறுகிறது.

அமெரிக்கா டெக்சாஸ், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த வரான டாக்டர் இலக்குவன்தமிழ் வரவேற்கிறார். அமெரிக்கா, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன்  விருது வழங்குகிறார்.

பிரிட்டன் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் விருதினைப் பெறுகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றுகிறார்.

மூன்று நாள்கள் நடைபெறுகின்ற சுயமரியாதை இயக்கத் தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் பெரியார் பன்னாட்டு மய்யம்(229, சிட்னி சாலை, ஹாலந்து, பெனிசில்வேனியா 18966, அமெரிக்கா), பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளையுடன் இணைந்து செய்துவருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner