எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெரியார் சுயமரியாதை பன்னாட்ட மைப்பு மாநாடு முதல் முறையாக ஜெர் மனியில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து  மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் 41 பேரில் 8 பேர் பெண் பேராளர்கள் ஆவர். மருத்துவர்கள், பொறி யாளர்கள்,  வரலாற்றாளர்கள், பேராசிரி யர்கள், கல்வியாளர்கள்  என பலதரப்பட்ட வர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, இங் கிலாந்து, பிரான்சு அய்ரோப்பிய நாடுகளி லிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

1972இலே தந்தை பெரியாருக்கு பாராட்டு அளித்தது. மத்திய கல்வி அமைச்சர் திரிகுணசிங், அன்றைய முதல்வராக இருந்த நம்முடைய கலைஞர் அவர்கள் தலைமையிலே, பெரியார் அவர்களுக்கு  யுனெஸ்கோ விருது  கொடுத்தார்கள்.


அதையொட்டி, இன்று உலகளாவிய நிலையிலே  ஆய்வுகள் பல பல்கலைக் கழகங்களிலே, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களிலே   ஆய் வுகள் நடத்தப்படுகின்றன. தந்தை பெரியார் அவர்கள் 1932இல் அய்ரோப்பிய நாடுகளுக் கெல்லாம் சென்று வந்திருக்கிறார். ஜெர்மனி, சோவியத் ரஷ்யா உள்பட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார். தந்தை பெரியார் அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஒரு பார்வையாளராகவே சென்றார்.

இன்றைக்கு அவர் உருவமாக இல்லா விட்டாலும், தத்துவங்களாக, தந்தை பெரி யாருடைய கொள்கைகளும், தத்துவங்களும் அலசி ஆராயப்படக்கூடிய அளவுக்கு, பல் கலைக்கழகங்களிலே பேசக்கூடிய   அள விற்கு பெரிய வாய்ப்புகள் உள்ளதாக இருக்கின்றன.

பெரியார் தத்துவமாகிய மனித நேயம், சுயமரியாதையை அடிப்படையாகக் கொண் டது என்பதற்காகத்தான் ஜெர்மனியில் மாநாட்டின் மய்யக் கருத்தாக பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாடு என்று நடத்தப்படுகிறது..

பல்கலைக்கழகங்கள் சாராத நிலையிலும் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் தந்தை பெரியார்குறித்து ஆய்வு செய்கிறார்கள். முன்பை விட இப்போது தந்தை பெரியார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ஆர்வத் துடன் உள்ளார்கள். அயல்நாடுகளிலிருந்து இங்கே உள்ள நம்முடைய ஆய்வகத்துக்கு வருகை தருகிறார்கள். தந்தை பெரியார் குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஜெர் மனியைத் தொடர்ந்து அடுத்ததாக அமெரிக் காவிலும், அதற்கடுத்தாற்போல் இங்கிலாந்து லண்டனிலும், மேலும் அடுத்தடுத்து பல் வேறு நாடுகளில் தந்தை பெரியார் குறித்த ஆய்வுகள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

தந்தை பெரியார் தனி மனிதரல்லர். அவர் ஒரு தத்துவம். அண்ணா சொன்ன தைப்போல, தந்தை பெரியார் ஒரு கால கட்டம், ஒரு சகாப்தம்!

புரட்சிக்கவிஞர் மண்டைச்சுரப்பை உலகு தொழும்  என்று சொன்னதைப்போல, தந்தை பெரியார் அவர் வாழ்ந்த காலத்தை விட தற்போது உலகத் தலைவராக, உலக மயமாக்கப்படுகிறார். உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தந்தை பெரியார், அம்பேத்கர்தான் தீர்வாக இருப்பார்கள்.

பல பிரச்சினைகளுக்கும் மருந்து தந்தை பெரியார் கருத்துதான். தந்தை பெரியார் ஒரு போதும் பலாத்காரத்தையும், வன்முறையை யும் விரும்பியவர் அல்லர். தன்னலமற்ற, மக்கள் நலன் சார்ந்தவர். ரகசியமாக இயக் கம் நடத்தியவரல்லர். வெளிப்படையானவர். தந்தை பெரியார் தத்துவம் உலகளாவிய அளவுக்குத் தேவைப்படுகின்ற தத்துவ மாகும்.

கி.வீரமணி சமூக நீதி விருது சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு முதன் முதலாக அளிக்கப்பட்டது. 18ஆவது ஆண்டாக ஜெர்மனியில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

அம்பேத்கர் இமயமலை, தந்தை பெரியார் எரிமலை.  ஆகவே, அணைத்து அழிக்க நினைப்பவர் எவரும் எளிதில் நெருங்க முடியாதவர் தந்தை பெரியார்.

- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner