எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சமூகநீதிக்கு எதிராக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களையும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களையும் மிகவும் பாதிக்கச் செய்யும், பழி வாங்கச் செய்யும் 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 6 மாதங்களுக்கு முன்பே ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து திராவிடர் கழகமும், பல்வேறு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளன.

அதே 'நீட்' பிரச்சினைக்காக வரும் 27ஆம் தேதி திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் திரளாகக் குடும்பம் குடும்பமாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஜெர்மனியில் நடைபெற உள்ள பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்க நானும், முக்கிய பொறுப்பாளர்களில் சிலரும் செல்லவிருப்பதால் மனித சங்கிலியில் பங்கேற்க இயலவில்லை. எனினும் கழகத் தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்று, திராவிடர் இயக்கம் போராடி - போராடிப் பெற்ற சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கும் பேரிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க அணி திரளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.  


சென்னை                                                                                       தலைவர்
25-7-2017                                                                                திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner