எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, ஜூலை 6 வரும் 2019 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் ஒருங்கிணைந்து செயல் பட்டால் பா.ஜ.க. ஆட்டம் முடிந்து விடும் என பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று (5.7.2017) நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தெரிவித் துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அய்ந்து மாநிலங் களுக்கான தேர்தலில் பா.ஜ.க. பெரும் பான்மை பலத்துடன் வென்றது. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தில் 300க்கும் அதிகமானத் தொகுதி களைக் கைப்பற்றியது. இதையடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைக் குறிவைத்து வேலை பார்த்து வருகிறது பா.ஜ.க. 

இதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட் சியை பலப்படுத்தும் பணியில் இறங்கி யுள்ளார்.

இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா கட்சித்தலைவர் லாலு பிரசாத் பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர் களைச் சந்தித்து பேசியபோது கூறிய தாவது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க-வின் ஆட்டம் முடிந்துவிடும் என்றார். மேலும், "எதிர்க்கட்சிகளின் பலம் பா.ஜ.க-வுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர்கள் எங்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால், பா.ஜ.க-வின் வெற்றி வெறும் கனவா கவே போய்விடும். அதுமட்டுமல்ல, அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இணைந்துவிட்டால் பா.ஜ.க-வின் ஆட்டம் முடிந்தது" என்று கூறியுள்ளார்.

ஒவ்வெருவரும் தங்களது கொள்கை களுக்கு ஏற்ப பணி யாற்றி வருகின்றனர். மாயாவதி, அகிலேஷ், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு என யாராக இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது.

ஒருவேளை ஒற்றுமை ஏற்பட்டால் அதைப் பிரிக்கவும் பாஜக விரும்புகிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் வலிமை என்னவென்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். ஒட்டு மெத்த எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து விட் டால், 2019-இல் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது, அது கனவாகிவிடும் என்பதை பாஜக நன்கு தெரிந்து வைத் துள்ளது.

2014-ஆம் ஆண்டு அரியானா, மகாராட்டிரா தேர்தலில் வெற்றிபெற்ற பாஜகவிற்கு 2015-ஆம் ஆண்டு ஜன வரியில் நடந்த டில்லி தேர்தல் தோல் வியைத் தந்தது. அங்கு கெஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றிபெற்றது,  2015-ஆம் ஆண்டு பிகார் தேர்தலில் பாஜகவை எதிர்த்து லாலு, நிதீஷ், காங்கிரஸ் என பெரிய கூட்டணி ஏற்பட்டது, இந்த கூட் டணிக்கு முன்பு பாஜகவால் தாக்கு பிடிக்கமுடியாமல் அவமானகரமான தோல்வியைத்தழுவியது.  ஆனால் இந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரிய மாநில மான உத்தரப்பிரதேசத்தில் வலுவான  மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி, அகிலேஷ்  தலைமையில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ்  கட்சிகள் ஒற்றுமையில்லாமல் தனித்து நின்றன. இதன் விளைவாக 32 விழுக்காடு வாக் குகள் பெற்ற பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

எதிர்க்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் 57 விழுக்காடு ஆகும். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி, அகிலேஷ் ஒற்றுமையாக இணைந் திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் இன்று பாஜக பெரும்தோல்வியைச் சந்தித் திருக்கும். ஆகவே மிகப்பெரும், மாநிலமும் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜகவை தோல்வியடையச் செய்துவிட்டால் மத்தியில் ஆட்சி அமைப்பதை எளிதாக தடுத்துவிடலாம். இந்தப் பார்வையில் லாலு - அகிலேஷ், மாயாவதி ஒன்றி ணையவேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner