எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 6 பிரதமர் நரேந்திர மோடி சமீ பத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது காஷ்மீரை இந்தியாவின் நிர்வாகத் தில் உள்ள பகுதி என அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரி விக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டிருந்தது. ஆனால், டொனால்ட் டிரம்ப் - மோடி இடையிலான சந்திப்பின்போது இது தொடார்பாக அவர் எதுவும் பேசாததை காங்கிரசார் கண்டித்து வருகின்றனர்.

மேலும், இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி - விசா நடைமுறைகளை எளிமைப்படுத் துமாறு பிரதமர் மோடி கேட் டுக்கொள்வார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அதுதொடர்பாக எந்த ஆலோ சனையும் நடை பெறாததால் காங்கிரஸ் கட்சி கொதிப்படைந் துள்ளது.

பிரதமர் மோடியின் அமெ ரிக்க பயணத்தை கிண்டலடிக் கும் வகையில் முன்னர் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் தலைமை நிலையத்தின் இணைய தளம், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமானது.., மூலப் பிரச்சனைகள் புறந் தள்ளப்பட்டு ஒரு புகைப்படம் எடுக்கும் விழாவாகவே முடிந்தது என்று குறிப் பிட்டிருந்தது.

கடந்த மூன்றாண்டுகளில் மோடி 64 முறை வெளிநாடு களுக்கு சென்றுள்ளார், இதன் மூலம் வெளிநாடுகளில் அவர் பேசிய காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி, அவரது இந்திய ரசிகர்களுக் குதான் தீனி யாக அமைந்ததே யொழிய நாட் டுக்கு ஆக்கப் பூர்வமான  ஆதா யங்கள் ஏதும் ஏற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கென் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், மோடியின் அமெரிக்க பயணம் தோல் வியில் முடிந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில்  தனது கருத்தை பதிவிட்டுள்ள அவர், மோடி-- டிரம்ப் பேச்சில் - விசா பிரச் சினை இடம்பெறவில்லை. இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்ற சொற்றொடரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக மும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியா மிக பலவீனமான பிரதமரை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner