எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஷில்லாங், ஜூலை 6 'நாட்டின் மதச் சார்பற்ற கட்ட மைப்பு, அபாயக் கட்டத்தில் உள்ளது; அதைக் காப்பாற்றவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன்'' என்று மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளராகக் கள மிறக்கப்பட்டுள்ள மீராகுமார், மேகாலயத்தில் புதன்கிழமை ஆதரவு திரட்டினார்.

தலைநகர் ஷில்லாங்கில், முதல்வர் முகுல் சங்மா, எதிர்க் கட்சித் தலைவர் டோங்குபர் ராய், எம்எல்ஏக்கள் ஆகியோர் முன்னிலையில், மீரா குமார் பேசியதாவது: ஒருவர் எப்படி வாழ வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்ற பெயரில், நாட்டில் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக் கின்றன. நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பு, தற்போது அபாயக் கட்டத்தில் உள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாட்டை மேம்படுத்தவும், நவீனப் படுத்தவும், நாட்டு நலனுக்காகச் செயல்படவும், அடுத்த தலை முறையினருக்காகவும், நாம் இணைந்து செயல்பட வேண்டும். வரலாறு படைப்ப தற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா, பல்வேறு மதம், இனம், கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் நல்லி ணக்கமாக வாழும் மிகப்பரந்த நாடாகும். இந்த நல்லிணக்கத்தை ஆட்சியில் இருப்பவர்கள் ஊக்குவிக்க வேண்டும்; அதற்கு ஊறு விளை விக்கக் கூடாது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொருவரும் மனசாட்சிப் படி வாக்களிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தா லும், குடியரசுத் தலைவர் தேர் தலில் எனக்கு ஆதரவு அளித்துள்ள 17 எதிர்க்கட்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன் என்றார் மீராகுமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner