எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜூலை 27 சுயமரியாதை இயக்கத்தின் 91ஆம் ஆண்டு நிறைவு விழா, பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு ஜெர்மனியில் இன்று (27.7.2017) தொடங்கியது. ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில் ஜூலை 27,28,29 மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டிற்கு தமிழகத் தலைவர்கள் அளித்துள்ள வாழ்த்துகளின் ஆங்கிலத்தின் தமிழாக்கம் வருமாறு:

தளபதி மு.க.ஸ்டாலின் (திமுக)

1926-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சுய மரியாதை இயக்கத் தின்  91-ஆம் ஆண் டினைக் கொண்டா டும் வகையில், ஜெர் மனி கொலோன் பல்கலைக்கழகத் தில் ஜூலை 27 முதல் 29 வரை நடைபெற உள்ள பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பன்னாட்டு மாநாடு சிறப்புற நடைபெற்றிட, சுயமரியாதை இயக்கத்தின் அர்ப்பணிப்பு கொண்ட தொண்டன் என்கிற முறையில் எனது வாழ்த்தினைத் தெரிவிப்பதை ஓர் பெருமைமிகு கடமையாகக் கருதுகிறேன்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதைக் காக, பெருமையுடனும்,  அர்ப்பணிப் புடனும் அயராது உழைப்பதோடு, தொலை நோக்காளர் தந்தை பெரியார், மக்களிடம் பரப்பிய கொள்கைகளை லட்சிய சுடரைத் தாங்கி மேலும் வெற்றிகரமாக முன்னெடுத் துச் செல்கிறோம்.

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்புமிகு தீர்மா னங்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த நிலையில் எழுத்திலும், செயலிலும் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் இயக்கத் தின் சமூகநீதிக் கொள்கையின் காரணமாக இந்திய மக்கள் வெகுவாக பயனடைந்துள்ள னர். பெண்கள் முன்னேற்றம் என்பது சுய மரியாதை இயக்கத்தின் முதன்மைக் கொள்கையாகும். பெண்களுக்கு சொத் துரிமை வழங்கும் சட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட மிகச்சிறப்பான, சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உரு வாக்கவல்ல சட்டமாகும். இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் சட்டமாகும். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற் கான சமூகப்புரட்சிக்கு வித்திட்ட சட்ட மாகும்.

மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட் டில் விவாதிக்கப்படும் தலைப்புகள், சமூக நீதி, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தளங்களில் சுயமரியாதை இயக்கம் வரலாற்று ரீதியாக ஏற்படுத்திய விழிப் புணர்வு குறித்து நிறைவான ஒளியைப் பாய்ச் சும் என்று அறிந்து மகிழ்கிறேன். ஜெர்மனி வாழ்மக்களுக்கும் இக்கொள்கைகள் நெருக் கமாக இருக்கும் எனக் கருதுகிறேன். எந்த ஒருநாட்டிற்கும் எதிர்காலச் சிற்பிகளாக திகழ இருக்கும் மாணவர் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டுதலாகவும்,  தகவல் களஞ்சியமாகவும், இம்மாநாடு முக்கிய பங் காற்றும் எனவும் கருதுகிறேன்.

திராவிடர் கழகத்தின் தலைவராக விளங்கும் டாக்டர் கி.வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும் இருபுறமும் கரம் கோர்த்து பயணிக்கும், தந்தை பெரியா ரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக் கம் மற்றும்  திராவிடர் இயக்க வரலாற்றில் இந்த மாநாடு சிறப்பான இடத்தை பெறும். மாநாடு மிகச் சிறப்பான வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

பேராசிரியர்
கே.எம். காதர்மொய்தீன் (இ.யூ.மு.லீ)

இந்திய  யூனியன் முஸ்லீக் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர் களின் வாழ்த்துச் செய்தி: ஜெர்மனி கொலோன் பல்க லைக்கழகத்தில் ஜூலை 27 முதல் 29 வரை நடைபெற உள்ள தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டின் அழைப் பிதழ் கிடைக்கப் பெற்றோம்.

எமது நன்றியைத் தெரிவிப்பதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க சுயமரியாதை மாநாடு வெற்றி பெற எமது வாழ்த்தினை, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் புரட்சியாளர் பெரியார் இன்று உலக அரங்கில் மதிக்கப்படும் தலைவராக விளங்குகிறார் என்பதில் தமிழக மக்களா கிய நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் சிறந்த மனிதநேயர், அரிய புரட்சியாளர் மற்றும் அபூர்வமான ஆளுமைத் திறன் கொண்டவர்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கம், மக்களை அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் பழைமைச் சடங்குகளில் இருந்து விடுவித்துள்ளது. மக்கள் தொண்டாற்றுவ தில் தந்தை பெரியார் உயர்ந்து விளங்கிய தலைவர். மாநாடு பெரியாரின் தத்துவங்களை அகிலம் எங்கும் பரப்பிட வாழ்த்துகிறோம்.

மாநாட்டில் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக விளங்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பெயரால் அமைந்த சமூகநீதி விருதினை வழங்கும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு எமது வாழ்த்துகள்.

தமிழக பொதுவாழ்க்கையில், தலைவர் வீரமணி அவர்கள் சமூகநீதியின் தூதுவராக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். அவரது பெயரில் சமூகநீதி விருது வழங்கிடுவதற்காக உங்களுக்கும், விருதை உருவாக்கிய பெரியார் பன்னாட்டமைப்பிற் கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக் கும் எமது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner