எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் பேராசிரியர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது

சென்னை, ஜூலை 28 திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நேற்று (27.7.2017) சென்னை பிராட்வே பகுதியில் நீட் தேர்விலிருந்து தமி ழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைநகர்களில் மனித சங்கிலிப்போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானித்தபடி, நேற்று (27.7.2017) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி அறப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத் தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், இந்திய சமூக நீதிப்பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களின் சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பிராட்வே பகுதியில் திமுக கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தமிழக காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், செல் வம் பெருந்தகை ராயபுரம் மனோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத் தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் சென்னை மத்திய மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய யூனியன் பொதுச் செயலாளர் முசுலீம் லீக் நிஜாமுதீன், துணை செயலாளர் ஆர்.ஜபருல்லா, இந்திய சமூக நீதிக்கட்சியின் பேராயர்கள், திமுக மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு, கவிஞர் சல்மா உள்பட பலர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வீ. அன்புராஜ் உரை

மனித சங்கிலிப் போராட்டத்தின் நோக்கங்களை  விளக்கி கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பேசியதாவது:

நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரி இந்த மாபெரும் மனித சங்கிலி நடை பெறுகிறது.

நீட் என்பது மோடி அரசால்National Elgibility Entrance Test என்று சொன்னாலும், தமிழக மாணவர்களுக்கு அது National Eradication and Elimination Test ஆகத்தான் இன்று செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு இது Eradication Test.,

இன்றைய நிலை என்ன? எப்போதும் நடக்கக்கூடிய கலந்தாய்வு, தரவரிசைப் பட்டியல் ஜூலை 14 நாள் அன்று வெளியிட வேண்டிய பட்டியல் இன்றுவரை 27ஆம் நாள் வரையிலும் இன்னும் வெளியிடப்பட வில்லை என்றால், ஏன் என்று தமிழக அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

ஏறத்தாழ 13 நாள்கள்  ஆகியும், இன்னும் தரவரிசைப்பட்டியலை அவர்கள் வெளியிடவில்லை. காரணம் 1197 மதிப்பெண்கள் வாங்கியுள்ள மாணவச் செல்வங்கள் எல்லாம் இருந்தும்,  இந்த நீட் தேர்வால்  அதை வெளியிடவில்லை. அது என்று வெளிவருகிறதோ, அன்று மாபெரும் கிளர்ச்சியாக, இந்த மனித சங்கிலிபோல், பல்வேறு வகையில் அது நடைபெறும். இதைத்தான் தமிழக அரசு எதிர்பார்க்கிறதா?

கடந்த 31.1.2017 அன்று சட்டம் இயற்றப்பட்டு இந்த ஏறத்தாழ ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் மத்திய அரசிடமிருந்து மாநில அரசு இன்னமும் கையொப்பம் பெறவில்லை. இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கிறது? ஆறு மாதங்கள் ஆனபின்னும் ஒன்றுமே செயல்படவில்லை. கடந்த 10 நாள்களில் மட்டும் இரண்டு முறை தமிழக அமைச்சர்கள் அவசர அவசரமாக மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள். இதையெல்லாம் கண்டித்துதான் இந்த மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்.

சமூக நீதிக்கு எப்போதெல்லாம் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை வருகிறதோ, அப்போதெல்லாம் திராவிடர் கழகம், சமூக நீதிக்காக இங்கே கூடியிருக்கும் அனைத்து கட்சிகளும், ஒருங்கிணைந்து எப்போதும் போராடுவோம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் குறித்து 13 அறிக்கைகளுக்கும் மேல் வெளியிட்டிருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், திராவிடர் கழகத்தின் சார்பில் 5 ஆர்ப்பாட்டங்கள், இரண்டு மாநாடுகள், தமிழகம் முழுவதும் அய்ந்து இடங்களிலிருந்து இருசக்கர வாகனம் மூலமாக நீட் எதிர்ப்புப் பரப்புரை பயணத்தையும் நடத்தியுள்ளோம்.

இவ்வளவு விழிப்புணர்வு ஏற்பட்டும், இன்னமும் மத்திய அரசும், மாநில அரசும் தூங்கிக்கொண்டிருக்கின்றன என்றால், இதைப்போல் மாபெரும் மனித சங்கிலிப்போராட்டத்தைப்போன்று பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்ற நிலையே ஏற்படும்.

மாணவர்கள், பெற்றோர் அனைவரும் அதிக அளவில் இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.

திராவிடர் கழகத் தோழர்கள்

திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தலைமைக்கழக சொற்பொழிவாளர் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட்டீஸ், வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன், துணைச் செயலாளர் கோ. வீ. ராகவன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, அரும்பாக்கம் சா.தாமோதரன், செஞ்சி ந.கதிரவன், பிரபாகரன், கு.செல்வேந்திரன், சண்முகப்ரியன், பொறியாளர் ஈ.குமார், புரசை அன்புச்செல்வன், சிங்கராயர், சி.பிரபாகரன், தரமணி மஞ்சுநாதன், உடுமலை வடிவேல், சுரேஷ், கலைமணி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், இனநலம், சீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு நீட் தேர்வைத் திணிக்கும் மோடியின் மத்திய அரசைக்கண்டித்து எழுச்சி முழக்கங்களை எழுப்பினார்கள்.

வழக்குரைஞர்கள் மனித சங்கிலி

நேற்று (27.7.2017) தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மனித சங்கிலிப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீண்ட வரிசையில் கைகளைக் கோத்துக்கொண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு முழக்கமிட்டவாறு  பங்கேற்றனர். திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர், மூத்த வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், ஆம்பூர் ஜெ.துரைசாமி, இரவி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.



தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner