எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஆலங்குளம், ஜூலை 9  கீழடி அகழ்வாய்வை முடக்கியது போல், செம்மொழி ஆய்வு நிறுவனத்தை முடக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் கழகத் தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (8.7.2017) பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தமிழர் தலைவர்: செம்மொழி தமிழ் என்பது உலகிலேயே, மற்ற செம்மொழிகளெல்லாம் இந்த அளவுக்கு பரவலாக பேசப்படாத ஒரு மொழியாகும்.

இந்த மொழிக்குப்பிறகுதான், சமஸ்கிருதமும் செம்மொழி என்று சொல்வதற்கு அதுவும் சேர்ந்து `நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கு ஆங்கே புசியுமாம்' என்பதைப்போல, அவர்களும் அந்த  வழியைப் பெற்றார்கள்.

இப்போது வேண்டுமென்றே, செம்மொழி நிறுவனத்தை  மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பதோ அல்லது வேறு சில அமைப்புகளோடு இணைப்பதோ கூடாது.

இது முழுக்க முழுக்க சுதந்திரமாக இயங்கக்கூடிய ஓர் அமைப்பு. இதற்கென பல பரிசுகள், தகுதிகள் அத்துணையும் இருக்கின்றன. செம்மொழியினுடைய வளம் மிக அழகாக செய்ய வேண்டியது. உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளிலே தமிழ் பரவ சிறப்பாகப் பணிகள் அங்கே நடத்தப்படுகிறது.

ஆகவே, உலகம் முழுவதும் இருக்கிற உலக மொழிகளிலே ஒன்றாக இருக்கக்கூடிய செம்மொழியை, வேண்டுமென்றே தகுதிக்குறைவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசி னுடைய சதித் திட்டங்களிலே ஒன்று. எப்படி கீழடி அகழ்வின் விளைவு, ஆய்வுகளையெல்லாம் சிதைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதேபோலத்தான் இன்னொரு முயற் சியை  மேற் கொள்கிறார்கள். இந்த செம்மொழி நிறுவனத்தி னுடைய தனித்தன்மை இருக்கக்கூடாது என்று கருதுகிறார்கள்.  இதை முறியடிக்க அத்துணை உணர்ச்சியாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் இதிலும் தன்னுடைய குரலைப் பதிவு செய்யும். எதிர்ப்பையும் வலிமையாகக் காட்டும்.

செயல்படாத தமிழக அரசு

செய்தியாளர்: தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

தமிழர் தலைவர்: தமிழக அரசு இருந்து செயல்பட்டால், செயல்பாடுகள்பற்றி சொல்லலாம். செயல்படவில்லையே.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் எல்லாரும் (ஆளுங்கட்சியின் பிரிவுகள்) பாஜகவுக்கு ஆதர வாக இருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: போட்டி போட்டுக்கொண்டு  மத்திய அரசிடம்  சரணடைந்து ஓட்டுப் போடத் துடிக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறு ஒன்றுமேயில்லை. அந்த அளவுக்கு இருக்கிறதே தவிர, அரசமைப்புச் சட்டரீதியாக தங்களுடைய உரிமையை நிலை நாட்டக்கூடிய அளவுக்கு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்பது கண்டனத்துக் குரியது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம். அனைத்துக் கட்சித் தலைவர்களையும்  அழைத்துச் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்திருக்கலாம். அத்துணை வாய்ப்புகள் இருந்தும் கூட, பலபேர் வலியுறுத்தியும்கூட, அவர்கள் கேளாக் காதோடு, செயல்படாத தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்கும், வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களிடையே பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner