எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 9 பாஜக அரசில் அங்கம் வகிப் பவர்கள் மற்றும் அக்கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஅய் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏன் சோதனை மேற்கொள்வ தில்லை? என்று மத்திய முன் னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது களங்கம் சுமத்திவிட்டு, பாஜகவினர் அனைவரும் பரிசுத்தமானவர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உரு வாக்க மத்திய அரசு முயலுவ தாகவும் அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 12 இடங்களில் சிபிஅய் அதிகாரிகள் வெள்ளிக் கிழமை சோதனை மேற் கொண்டனர். ரயில்வே அமைச் சராக லாலு பதவி வகித்தபோது நிர்வாகரீதியாக சில முறை கேடுகளில் ஈடுபட்டதாக வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்ட தாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டில்லியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது:

லாலு பிரசாத் மீதான குற் றச்சாட்டுகள் மற்றும் அவருக் குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோத னைகள் குறித்த விவரங்கள் எதுவும் எனக்கு முழுமையாகத் தெரியாது. எனவே, அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்ப வில்லலை.

அதேவேளையில், இத் தகைய சோதனைகளை எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு எதி ராக மட்டும் முடுக்கி விடுவது குறித்து மத்திய அரசிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்பு கிறேன். பாஜக ஆளும் மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஒருவரது இடத் தில் கூட சிபிஅய் சோதனை இதுவரை நடைபெறவில் லையே ஏன்?

எதிர்க்கட்சியினர் அனை வரும் களங்கம் நிறைந்தவர்கள்; பாஜகவினர் மட்டும் பரிசுத்த மானவர்கள் என்ற சித்திரிப்பை உருவாக்கத்தானா? இந்த விவ காரத்தில் நாங்கள் எழுப்பும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு அரசு பதிலளித்தால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner