எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூலை 9 நிர் வாகத் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவே பசு பாது காப்பு பிரசாரங்களை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

மதணீரீதியான மோதல்கள் அதிகரித்திருப்பதால் நாடு முழுவதும் பதற்றான சூழல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாயாவதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

மத்தியிலும் சரி; மாநிலங் களிலும் சரி, எங்கெங்கெல்லாம் பாஜக ஆட்சி அமைந்துள்ளதோ அங்கு மதரீதியாகவும், சமூகரீதியாகவும் மோதல்கள் வெடிக் கின்றன. நாட்டை பிளவுபடுத் தும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்; மாறாக, மக்களை ஒன்றிணைய விட மாட்டோம் என்ற நோக்கத்தை பாஜக கொண்டுள்ளது. அக்கட் சியில் செயல்பாடுகளில் இருந்தே அதனை உணர முடியும்.

மத்திய பாஜக அரசின் அதிகாரங்களைப் பயன்படுத் திக் கொண்டு தங்களது கொள் கைகளையும், சித்தாந்தங்களை யும் திணிக்கும் நடவடிக்கை களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.பாஜக ஆட்சியால் தற்போது நாடு முழுவதும் அச்சம் சூழ்ந்துள் ளது. பல்வேறு விவகாரங்களில் தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களை மத்திய அரசு குழப்பி வருகிறது.

சரக்கு - சேவை வரி விவ காரத்தைப் பொருத்த வரை, அது அரை குறையாக அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள் ளது. எந்தவிதமான ஆயத்தமும் இல்லாமல் உடனடியாக அந் தச் சட்டம் நடைமுறைப் படுத் தப்பட்டுள்ளதால் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசை எடுத்துக் கொண் டால், அவர்கள் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாநி லத்தில் குற்றச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப் படவில்லை.

மாநிலத்தில் அமைந்துள்ள சாலைகள், அரசு மருத்துவ மனைகள் அனைத்துமே முறை யாக இல்லை. மின்சார வசதி, குடிநீர் வசதி அனைவருக்கும் சென்றடையவில்லை. மொத்தத்தில் மத்திய அரசும், மாநில பாஜக அரசுகளும் தங்களது நிர்வாகத் தோல் விகளை மறைப்பதற்காக பசு பாதுகாப்பு போன்ற விவகாரங் களை முன்னிறுத்தி மக்களை திசை திருப்பி வருகின்றன என்றார் மாயாவதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner