எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜூலை 31 மத்தியப்பிரதேச மாநிலத் தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகளில் நடைபெற்ற வியாபம் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தவரான டாக்டர் ஆனந்த்ராய் தற்போது, நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை கோரி டில்லி உயர்நீதி மன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வெழுதியவர்களில் சில மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் வினாத்தாள்கள் கசியவிடப்பட் டதன்மூலமாக முறைகேடுகளைச் செய் தார்கள் என்று நொய்டா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் இருந்த இரண்டு மய் யங்களில் மட்டும் கடந்த ஆறு மாதங் களுக்கும் மேலாக காவல்துறையினர் விசா ரணை செய்து வருகிறார்கள்.

டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை முடிவில் அண்மையில் குற்றப் பத்திரிகையை டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள்கள் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட தனியார் நிறுவனமாகிய புரோமெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் முறைகேட்டில் தொடர்புள்ளதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலை யில் முறைகேடுகள் நடைபெற்றன.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  நுழை வுத் தேர்வில் நொய்டா, சண்டிகர் பகுதி தேர்வு மய்யங்கள் மட்டுமல்லாமல் டில்லி, நொய்டா, சண்டிகர், லக்னோ, புவனேசுவரம் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மய்யங்களில்  முறைகேடுகள் நடைபெற்றன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் முறை கேடுகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டாக்டர் ஆனந்த் ராய் கூறும் போது, “ஆதாரங்கள் அழிக்கப்படுவது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக் கப்படவில்லை. இவ்வழக்கின் விசார ணையே கேலிக்கூத்தாக நடந்துள்ளது. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் மருத்துவ கல்வியில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அம்மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர் களாக பணியாற்றியும் வருகின்றனர். ஆகவே தான், டில்லி உயர்நீதிமன்றத்தை அணுகி மத்திய புலனாய்வு விசாரணை கோர உள்ளேன்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner