எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஜூலை 31 தேசத்திலிருந்து மதவாத சக்திகளை தோற்கடிக்க அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் போன்றோர் நாடு முழுவதும் பயணம் மேற் கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி யின் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தினார்.

பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதி கரித்து வருகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண் டுள்ள ஜேடியு மூத்த தலைவர் சரத் யாதவ் போன்றவர்கள் நாடு முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றார் லாலு.

பீகாரில் மகா கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் அந்த மாநில முதல்வரானார். இந்நிலையில், நிதீஷ் குமாரின் இந்தச் செயலால் சரத் யாதவ் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதா ராம் யெச்சூரி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner