எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, ஜூலை 31 மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டளிக்க குஜராத் தில்  காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் பாரதிய ஜனதா 15 கோடி  பேரம் பேசி யது  என அம்மாநிலத்தில் இருந்து பெங்களூருவில் தங்க வைக்கப் பட்டுள்ள காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள்  குற்றம்சாட்டினர்.

குஜராத் எம்எல்ஏ.க்கள் 44 பேர்  நேற்று முன்தினம் (ஜூலை 29இல்) பெங்களூரு அழைத்து வரப்பட்டு   சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.  இந்நிலையில், நேற்று திடீரென  இந்த  எம்எல்ஏ.க்கள் அனைவரும் செய்தியாளர் களை சந்திக்க ஓட்டலில் ஏற் பாடு   செய்யப்பட்டது. அதில், எல்லா   எம்எல்ஏக்களும் அடையாள அட்டை   அணிவிக் கப்பட்டு வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.   எம்எல்.ஏ.க்கள் சார்பில்  குஜ ராத் காங்கிரசை சார்ந்த மூத்த எம்எல்ஏ  சக்தி  சின்ஹா கோயல் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: நாங்கள்  யாருடைய  வற்புறுத் தலின் பேரிலும் பெங்களூரு வரவில்லை. எங்களை பணம்  கொடுத்து வாங்கி விடலாம்  என்பது  நடக்காத காரியம். குஜராத்தில் ஜனநாயகத்தை  சீர் குலைக்க பாஜ முயற்சிக்கிறது.  ஒரு எம்எல்ஏ.வுக்கு 15 கோடி வரை பேரம்  பேசப்பட்டது.  ஒருவேளை  குஜராத்தில் ஜன நாயகம் சீர்குலைந்தால், அதற்கு  பாஜ.வே முழு காரணம். மாநி லங்களவை தேர்தலில்  காங்கிர சின் பலத்தை   நிரூபித்துக் காட்டுவோம். நாங்கள்  பெங் களூரு வந்திருப்பது குறித்து  எதிர்க்கட்சியினர் என்ன கூறி னாலும்,  அதைப்பற்றி எங் களுக்கு கவலையில்லை.

பாஜ தலைவர்  அமித்ஷா வின் அரசியல் ராஜதந்திரம்  எங்களிடம் பலிக்காது. காங்கிர சில் இருந்து 7 எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு  தாவுகின்றனர் என  கூறுகின்றனர்.   ஆனால், நாங் கள் அனைவரும் இங்கு  இருக் கிறோம்.  அப்படியென்றால், பாஜ.வுக்கு சென்றுள்ள அந்த 7 பேர் யார்   என்பதை அவர் களால்  நிரூபிக்க  முடியுமா?.  மாநிலங்களவை தேர்தலில்  காங்கிரஸ்  வேட்பாளர்  வெற்றி பெற 53 எம்எல்ஏ.க்களின் ஆதரவு போதுமானது. எங்களி டம்  தற்போது  60  எம்.எல்.ஏக்கள் உள்ளனர்  குஜராத்தில்  மக்கள் விரோத பாஜ ஆட்சியை  எதிர்த்து போராடுவதே எங்க ளின் குறிக்கோள். இவ்வாறு கோயல் கூறினார். கருநாடக  அமைச்சர் டி.கே. சிவக்குமார்  எம்.எல்.ஏ.க்களை செய்தியாளர் களுக்கு அறிமுகம்  செய்து வைத்து பேசுகையில், கருநாட காவில் உள்ள சுற்றுலாத்  தலங் களை  காண்பதற்காக இவர்கள்  வந்துள்ளனர். இவர்களை கவுர விக்க வேண்டியது கருநாடக  காங்கிரசின் கடமை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner