எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, ஜூலை 31 குடியரசு துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் காந்தியாரின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். பீகார் மாநிலத் தில் சமீபத்தில் நடந்த கூட் டணி மாற்றத்தை தொடர்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்-வராக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில்குமார் மோடி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் குடி யரசு துணைத் தலைவர் தேர் தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையா நாயுடுவை ஆதரிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அய்க்கிய ஜனதா தள கட்சியின் பொது செயலாளர் கே.சி.தியாகி கூறு கையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையாவை நாங்கள் ஆதரிக்கப் போவ தில்லை. எதிர்க்கட்சிகள் சார் பில் நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள் ளோம் என தெரிவித்துள்ளார்.

 

இன்றைய ஆன்மிகம்?

கருடன்

வியாழக்கிழமைகளில் குளத்தோரங்களில் பக்தர்கள் நின்று கொண்டு இருப்பார்கள். எதற்குத் தெரியுமா? கருட சேவைக்காக; கருடன் பறந் தால் கன்னத்தில் போட்டு கும்பிடுவார்கள்; கருடன் விஷ் ணுவின் வாகனமாம் சரி. அதே கருடன் பக்தர்கள் வீட்டுக்கோழிக் குஞ்சைத் தூக்கி செல்லும் போது கல்லை எடுத்து அடிப்பானேன்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner