எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஆக. 2- பீகார் மாநிலத் தில், நிதிஷ் குமார் தலைமை யில், அய்க்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட் டணி ஆட்சி நடந்து வந்தது. துணை முதல் அமைச்சராக இருந்த லாலு மகன் மீது சி. பி.அய். ஊழல் வழக்கு பதிவு செய்தது. இதனால், அவரை பதவி விலகுமாறு நிதிஷ் குமார் தரப்பில் கேட்டுக்கொள் ளப்பட்டது. ஆனால், அவர் பதவி விலக மறுத்ததால், நிதிஷ் குமார் பதவி விலகினார். லாலு கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். மறுநாளே, பா.ஜனதா ஆதரவுடன், மீண் டும் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.

இதுபற்றி நிதிஷ் குமார் பேசுகையில், லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்பத் தினர் மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்தது. நான் அதுபற்றி எந்த விளக்கமும் கேட்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உரிய பதில் அளிக்குமாறு மட்டுமே கேட்டேன். அதற்கு அவர்கள், நிதிஷ் குமார் சி.பி.அய். அதி காரியா? காவல்துறையா? என்று என்னை கேலி செய்தனர். லாலு பிரசாத் (யாதவ்) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆகவே, லாலுவுடனான மகா கூட்டணியில் இருந்து விலகு வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார். மேலும் பிரதமர் மோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை என்றும் குறிப்பிட்டார் நிதிஷ் குமார்.

இப்போது பீகாரில் மகா கூட்டணியை உடைத்ததற்கும், பிரதமர் மோடியை பாராட்டிய தற்கும் நிதிஷ் குமாரை லாலு பிரசாத் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.  நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள லாலு பிரசாத் (யாதவ்), நிதிஷ் குமாரை எனக்கு முதலில் இருந்தே தெரியும், அவரைவிட நான் மூத்தவன். நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி, அவ ருடைய உண்மையான நிறம் வெளியே விரைவில் தெரியும். சந்தேகத்திற்குரிய குணாதிசயத் தால் அறியப்பட்டவர் நிதிஷ் குமார். என்னிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அரசியல் கூட் டத்திற்கு சென்றதையும், விவா தத்திற்கு சென்றதையும் நிதிஷ் குமார் மறந்துவிட்டார். முலா யம் சிங் கால்தான் மகா கூட்டணி முதல் அமைச்சராக நிதிஷ் குமாரை அனுமதித்தேன் என்றார்.

பிரதமர் மோடியை பாராட் டிய நிதிஷ் குமாரை சாடிய லாலு பிரசாத், நேற்றுவரையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார் நிதிஷ். இப்போது திடீரென பிரதமர் மோடியை பாராட்டத் தொடங்கி உள்ளார். அவரை நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்கிறார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை யாரா லும் தோற்கடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். நிதிஷ் குமார் புகழ் பெற என்னுடைய மகனை பலிகடா ஆக்க விரும் பியது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner