எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 2- குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னி றுத்தப்பட்டுள்ள பொது வேட் பாளர் கோபாலகிருஷ்ண காந்தி, தமக்கு ஆதரவு அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கு அஞ்சல் அட்டை வாயி லாக கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலை வர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இந்தப் பதவிக்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடு வேட்பாளராக நிறுத்தப்பட்டி ருக்கிறார்.

அவருக்கு எதிராக காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார் பில் காந்தியாரின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளு நருமான கோபாலகிருஷ்ண காந்தி பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தத் தேர் தலில் தமக்கு ஆதரவு அளிக்கு மாறு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு கோபால கிருஷ்ண காந்தி அஞ்சல் அட்டை மூல மாக கோரிக்கை விடுத்து வரு கிறார். காந்தியாரின் தபால் தலை ஒட்டப்பட்டிருக்கும் 50 பைசா மதிப்பிலான அஞ்சல் அட்டைகளில் அவர் இத்த கைய பிரசாரத்தை மேற்கொண் டுள்ளார். இந்தக் கடிதங்களில் அவர் கூறியுள்ளதாவது:

குடியரசுத் துணைத் தலை வர் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை ஏராளமான அர சியல் கட்சிகளும், தனி நபர்க ளும் முன்மொழிந்துள்ளனர். எந்தவித அச்சமும், பாகுபாடும் இல்லாமல், இந்திய மக்களுக்கு சேவையாற்ற உறுதிபூண்டிருக்கி றேன். குடியரசுத் துணைத் தலை வர் என்ற உயர்ந்த பதவிக்கு நான் தகுதிவாய்ந்தவனா என் பதை நீங்கள் பரிசீலியுங்கள் என அந்தக் கடிதத்தில் கோபா லகிருஷ்ண காந்தி தெரிவித் துள்ளார்.

நவீன செல்லிடப்பேசிகள், இணையதள வசதிகள் நிறைந் திருக்கும் இந்த காலத்தில், அஞ் சல் அட்டை மூலம் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரி வருவது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner