எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபெங்களூரு, ஆக. 2- -காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள் ளகூட்டுக்குழு ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கருநாடகம் - மத்திய அரசை சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் இடம் பெற்றுள்ளனர்.

கருநாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பலநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தமிழகத்திற்கு வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு வரும் வழியில் காவிரி ஆற்றில், பல் வேறு வகையான ஆலைகளில் இருந்து கழிவுப் பொருட்கள் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. பெரும்பாலும் கர் நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகமான கழிவுகள் கலக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி தமி ழக அரசு முறைப்படி தெரிவித் தும், கருநாடக அரசு நடவ டிக்கை எதையும் எடுக்காததால், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

அபாயகரமான கழிவுக ளோடு வரும் காவிரி தண்ணீ ரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாகவும், காவிரி ஆற்றில் வளரும் மீன்கள் உள் ளிட்ட நீர்வாழ்உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளதாகவும், இதனால் பாதிக்கப் படும் தமிழக விவசாயிகளுக்கு கருநாடக அரசு ரூ.2 ஆயிரத்து 400 கோடிஇழப்பீட்டு தொகை யாக வழங்க வேண்டும்என்றும் தமிழக அரசு தனது முறை யீட்டில் தெரிவித்திருந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் காவிரியில் கழிவு நீர் கலப்பதைஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் குறித்து ஆய்வு செய்ய தமிழ கம், கருநாடகம்,- மத்திய அரசு இணைந்த கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலை மையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டுக் குழு ஆகஸ்ட் 15 முதல் தனது ஆய்வை தொடங்குகிறது.

நீட் தேர்வு விவகாரம்: அனைத்துக் கட்சி
கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சேலம், ஆக. 2- நீட் தேர்வில் தமி ழகத்துக்கு விலக்கு பெறுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அதன் தீர்மா னத்தை அனைத்து கட்சி நிர் வாகிகளுடன் சென்று பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோ ரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச் சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்  வருமானம் உள்ளவர் கள், 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரேசனில் பொருட்கள் இல்லை என்று கூறுவது மக்களை வஞ்சிக்கும் திட்டம்.

மக்கள் நலனுக்கு எதிராக, மத்திய அரசுக்கு துணைபோகும் அரசாக தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. எரிவாயு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத் துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, அதன் தீர்மானத்தை அனைத்தும் கட்சி நிர்வாகிக ளுடன் எடுத்துச் சென்று பிரத மர், குடியரசுத் தலைவரை சந் தித்து, நீட் தேர்வில் தமிழகத் துக்கு விலக்கு அளிக்க வலி யுறுத்த வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner