எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநிலங்களவையில் டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக. 3- பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைப்பதில் மத்திய அரசுக்கு மறைமுகத் திட்டம் கூடாது எனவும் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இந்தசட்டம் இருக்கக் கூடாது எனவும் மாநிலங்களவையில் டி.கே.எஸ்.இளங் கோவன் வலியுறுத்தினார்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உரு வாக்கும் சட்ட திருத்தம் குறித்த விவாதத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே! இந்த சட்டத் திருத்தம் தி.மு. கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன் றாகும். தற்போது கொண்டு வரப்பட்டிருக் கிறது. பொதுவாக இந்த அரசாங்கம் அறி முகப்படுத்தும் சட்டங்களில் ஏதாவது மறைமுகத் திட்டம் இருக்கும். என்னுடைய அய்யப்பாடு என்னவென்றால் இந்தச் சட் டத்திருத்தத்தின் பின்னணியிலும் பா. ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் இருக்கிறதா என்பதுதான். பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் உரிமை மாநிலங் களுக்கே உரியது. மாநி லங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வர்கள் பட்டியலை முடிவு செய்ய இய லும். மத்திய அரசால் இயலாது.
தந்தை பெரியார் கொள்கை

தமிழகத்தைப் பொறுத்தவரை திரா விட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெ ரும் சமூக நீதி இயக்கத்தின் வழி வந்த அரசியல் கட்சி. தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கட்சி. தந்தை பெரியாரின் கொள்கை களைப் பின்பற்றிவரும் கட்சி.
தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே அறிவியல் சிந்தனைகளின் அடிப்படை யில் தனது கொள்கைகளை வகுத்துக் கொண்ட மாபெரும் தலைவர். எந்த நிலையிலும் அவருடைய எழுத்துக் களும், பேச்சுக்களும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த தில்லை. அவருடைய சிந்தனைகள் அனைத் தும் அறிவியல் அடிப்படையில் அமைந்த காரணத்தால்தான் அவரால் கடவுள் தத்து வத்தை ஏற்றுக் கொள்ள இயல வில்லை. அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட தைத்தான் அவர் பரப்புரை செய்தார்.
உள்ளிருந்தே போராடி

தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம் பேத்கருக்கும் இடையில் இருந்த ஒரே வேறு பாடு என்னவென்றால், அண்ணல் அம்பேத் கர் ஒடுக்கப்பட்ட மக்களை புத்த மதத்தைக் தழுவி இந்து மதத்தைப் புறக்கணிக்கச் சொன்னார். ஆனால் தந்தை பெரியார் மதம் மாற வேண்டாம். உள்ளிருந்தே போராடி வெற்றி பெறுவோம் என்று சொன்னார்.

இப்பொழுது சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை உருவாக்கும் இந்தச் சட்டம் இந்த அவையில் விவாதத்துக்கு வந்துள்ளது. நான் இந்தச் சட்ட முன் வடிவில் ஒரு திருத்தம் தந்துள்ளேன். அதாவது “நாடாளுமன்றம் ஒரு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு சாதியை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இயலும்” என்று இருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியை எப்படி நீங்கள் நீக்க முடியும் என்பதுதான். கல்வி அடிப் படையில் பிற்படுத்தப்பட்டோர் என்றாலோ, பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோர் என்றாலோ நீக்குவதற்குக் காரணம் சொல்லலாம். ஆனால் சமூக அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை நீங்கள் எப்படிப் பட்டியலிலிருந்து நீக்க முடியும்?

எனக்கு முன்னர் பேசிய அதிமுக உறுப் பினர் திரு. முத்துக்கருப்பன் அவர்கள் திரா விட இயக்கத்தின் வரலாறை இங்கே பதிவு செய்தார். ஆனால் அவர் மிக வசதியாக, தலை வர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் பற்றியே குறிப்பிடாமல் பேசினார்.

சமூக மாற்றத்துக்கான
அர்ச்சகர் பயிற்சி

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் சமூக மாற்றத்துக்கான மிகப் பெரிய  சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  எந்த சாதியைச் சார்ந் தவரானாலும், ஆகம விதிகளின்படி அர்ச் சனை செய்யும் பயிற்சி பெற்றிருந்தால் அர்ச் சகர் ஆகலாம் என்ற சட்டத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தின் அடிப்படையில் இதுவரை ஏறத் தாழ 300க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சாதி அவர்களுக்குத் தடையாக இருக்கும் காரணத்தால் அவர் களால் எந்தக் கோவிலிலும் அர்ச்சகர் பணி யில் சேர இயலவில்லை. அதனால் தான் சொல்கிறேன், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எந்த சாதியையும் நீக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வைத்துக் கொள் ளக் கூடாது என்று!

எங்கள் குழுத் தலைவர் கனிமொழி அவர்கள்கூட மாநில அரசுகளின் உரிமை யைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு திருத்தத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் தற்பொழுது அவைக்கு வர இயலவில்லை என்றாலும் அவருடைய திருத்தமும் பரி சீலிக்கப்படவேண்டும்.

மாநில அரசின் அதிகாரம்

இங்கே பலராலும் முன்மொழியப்பட் டிருக்கும் திருத்தங்கள் அனைத்துமே இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கு வதில் மாநில அரசுகளுக்குள்ள அதிகாரம் பறிபோகக் கூடாது என்ற எண்ணத்தில் முன் மொழியப் பட்டவையாகும்.

இரண்டாவதாக, இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டது போல இதர பிற்படுத்தப்பட் டவர்கள் இட ஒதுக்கீடு பெற நிர்ணயிக்கப் பட்டிருக்கும் வருவாய்  உச்சவரம்பு  நீக்கப் பட வேண்டும்  என்பதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.  எப்படி ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்றிருந்தாலும் சாதியின் காரணமாகக் கோவில்களில் அர்ச் சனை செய்யும் உரிமை மறுக்கப்படுகிறதோ அப்படித்தான் சமூக அடிப்படையில் பிற் படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பாகக் கருதப்பட மாட்டார்கள். எனவே புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையம் வருமான உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கே முன்மொழி யப்பட்டுள்ள திருத்தங்களை பிற்படுத்தப்பட் டோர் நன்மை கருதி இந்த அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது எந்தவித மறைமுகத் திட்டமும் இந்த அர சுக்கு இருக்கக்கூடாது என்று வலியுறுத்து கிறேன். இந்தச் சட்டம் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இதன் பின்னணியில் எந்த மறைமுகத் திட்டமும் இருக்கக்கூடாது. நன்றி.

இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner