எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமர்நாத் பயணம்: சாவு எண்ணிக்கை 70ஆக உயர்வு

ஜம்மு, ஆக. 3- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக பக்தர்கள் பயணம் செய்வார்கள். பள்ளத்தாக்கான மலைப் பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலை யடிவார முகாமில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

62-ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் பயணம் கடந்த ஜீன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

பயணம் சென்றவர்களில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. தரிசனத்துக்காக மலைப் பாதை வழியாக ஏறிச்சென்ற பக்தர் ஒருவர் நேற்று மாரடைப்பால் உயிரி ழந்தார். சுமார் 65 வயது மதிக்கத்தக்க அந்த பக்தர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோம்நாத் என தெரியவந்துள்ளது. இதனால், உடல்நிலை சார்ந்த உபாதை களால் இந்த பயணம் காலத்தில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந் துள்ளது.

முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத் தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
மேலும், சாலை விபத்துகளில்

20-க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந் தனர். இதனால், இந்த ஆண்டின் அமர் நாத் யாத்திரை காலத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எழுபதை கடந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

6 சிலைகளை காணவில்லை
10 பேர் மீது வழக்குப்பதிவு

திருவிடைமருதூர், ஆக. 3- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.  சோழர்மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய இக்கோயிலுக்கு ஏராளமான நிலங்கள், நகைகள் உள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி சுற் றுப்புற பகுதிகளிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 70க்கும் மேற்பட்ட  கோயில்களி லிருந்து பழமைவாய்ந்த அய்ம்பொன் சிலைகள் பல ஆண்டுகளாக இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கீழமணக்குடி  விஸ்நாத சுவாமி கோயிலிலிருந்து விநாயகர், புஷ்பகரனி, வள்ளி தெய்வானை, சந்திரசேகரர், அம்மன், ரங்கராகபுரத்தில் உள்ள இடும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 6 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு இக்கோயிலின் செயல் அலுவலராக காமராஜ் என்பவர் பணியில் இருந்த போது சிலைகள் இருந்துள்ளன. அதன் பிறகு அந்த சிலைகள் காணாமல் போனது.

இதுகுறித்து மதுரை உயர் நீதிமன் றத்தில் பந்தநல்லூரில் பூர்வீகமாக இருந்து தற்போது சென்னையில் வசிக்கும் வெங்கட்ராமன் வழக்கு  தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சிலைகள் காணாமல் போனது குறித்து  இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர்  கஜேந்திரன் மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் ஞானசேகரன், முன் னாள் கோயில் செயல் அலுவலர்கள் காமராஜ், ராமச்சந்திரன், அறங்காவலர்  குழு உறுப்பினர் பசுபதியாபிள்ளை, முன்னாள் அறங்காவலர் மனோகரன், சிவாச்சாரியர்கள் ஜெகதீஷ், சேகர், முன் னாள் தலைமை எழுத்தர் ராஜா,  கணினி ஆபரேட்டர் சரவணன் ஆகிய 10 பேர் மீது பந்தநல்லூர் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். இந் நிலையில் நேற்று முன்தினம் அந்த 10 நபர்கள் மீது சிலை கடத்தல் தடுப் புப்பிரிவு காவல்துறையினரும் வழக் குப் பதிவு செய்துள்ளனர்.

நகைகள் கொள்ளை

தியாகருதுகம், ஜூலை 3- விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள் ளது சூலாங்குறிச்சி. இங்கு செல்லியம் மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பூசாரியாக வெங்க டேசன் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். நேற்று இரவு கோவில் பூசாரி வெங்கடேசன் பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நள்ளிரவில் சில மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் பொட்டு தாலியையும், 4 கிராம் வெள்ளி கண்மலரையும், அம்மன் கையில் இருந்த ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி சூலாயுதத்தையும் கொள்ளை யடித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த உண் டியலை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் கொள் ளையடித்த நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இன்று காலை பூசாரி வெங்கடேசன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவி லின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, காவல் துறையினர் விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசா ரணை நடத்தினர்.

இந்த கொள்ளையில் துப்பு துலக்க காவல்துறை மோப்ப நாய் வரவழைக் கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர் களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

கோவிலில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner