எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாட்டுமக்களுக்கு கோபால கிருஷ்ண காந்தி வேண்டுகோள்

புதுடில்லி, ஆக. 4- நமது நாட்டில் கருத்து சுதந்திரத்தின் மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர் தலில் போட்டியிடுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அரசமைப்புச் சட்டப்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம், விரும் பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது நமது சுதந்திரத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தாக்குதல் நிகழ்த்தப்படுகின் றன. பொது நலன் கருதி செயல்படும் அமைப்புகளுக்கும் இதுபோன்ற நெருக்கடிகள் அதிகம் உள்ளன.

சகிப்பின்மை, எதிர்க் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத நிலை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு இப்போது அதிகரித்துவிட்டது.

காந்தியடிகளின் 70ஆ-வது நினைவு தினத்தை இன்னும் 6 மாதத்தில் கடைப்பிடிக்க இருக்கிறோம்.  காந்தி யார் படுகொலை செய்யப்பட்டது தேசப் பிரிவினையால் ஏற்பட்ட மிகப் பெரிய காயம். முன்பு நிலத்தை அடிப் படையாகக் கொண்டு தேசத்தில் பிரிவினைகள் நிகழ்ந்தன.

ஆனால், இப்போது அதைவிட மோசமாக மக்களை மனதளவில் பிரிக்கும் பிரிவினைவாதம் தலை தூக் கியுள்ளது. எனவே, ஜாதி, மதவா தத்தை நாம் ஒருபோதும் முன்னிறுத்தக் கூடாது.

சுதந்திரம், அனைவருக்கும் ஒரே நீதி, சமத்துவம் ஆகியவை நமது நாட் டின் சுதந்திரப் போராட்டத்தின் முக் கியக் கொள்கைகளாக இருந்தன. ஆனால், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நாம் போராடிப் பெற்ற சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதி ராக பெரும் சவால் எழுந்துள்ளது.

நமது நாட்டில் தேர்தல் ஆணையம் மிகவும் சிறப்பாகவும், சுதந்திரமாக வும் தேர்தல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இருக்கிறோமா? எவ்வித அச்சமு மின்றி வாழ்ந்து வருகிறோமா? அச்ச மின்றி கருத்துகளைத் தெரிவிக்க முடி கிறதா? அரசின் குற்றம், குறைகளை உயர் பொறுப்புகளில் இருப்பவர்களி டம் தைரியமாக எடுத்துச் செல்ல முடி கிறதா? தெருமுனைகளில் அரசின் செயல்பாடுகள் தைரியமாக விமர்சிக்க முடிகிறதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறு வனங்கள் நமது சுற்றுச்சூழலையும், ஆறுகளையும் கெடுக்கவில்லை என்று நம்மால் உறுதியாகக் கூற முடியுமா? குடியரசுத் தலைவர் பதவி என்பதும், குடியரசு துணைத் தலைவர் பதவி என்பதும் நமது ஆட்சி முறையை உயிரோட்டமாக வைத்திருக்கக் கூடிய பதவியாகும். இந்தியாவில் சுதந்திர மும், சமூக நீதியும், மக்களிடையே உள்ள ஒருமைப்பாடும்தான் மிக உயர்ந்தது. அதனைக் காக்க வேண்டும் என்று நமக்குள் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம்தான் நமது தேசத்தில் அமைதி நிலவும் என்று அந்தக் கடிதத்தில் கோபால கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner