எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இறைச்சிக்காக மாடுகள் விற்பதை

தடுக்கும் சட்டத்திற்கு தடை நீட்டிப்பு

மதுரை, ஆக. 4-  மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓர் அர சாணை வெளியிட்டது. அதில், `கால்நடை சந்தைகள் மூல மாக மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்டவற்றை இறைச்சிக் காக விற்கவோ, வாங்கவோ கூடாது. தோல் பொருட்கள்  தயாரிப்புக்காக மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால் நடைகளை விற்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நாடு முழுவதும் உடனடியாக  அமலுக்கு வந்தது. இந்த தடையை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, களிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாஹி பாபா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த மே 30இல் விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சட்டத் திருத்தத்திற்கு  இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ் குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே  விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

அதிர்ச்சித் தகவல்: 50 ஆண்டுகளில்

400 இந்திய மொழிகள் அழிந்து விடும்

புதுடில்லி, ஆக. 4- அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா (பி.எஸ்.எல்.அய்.,)' எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத் தியது. ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில் 400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகி யுள்ளது.

கல்வியறிவின்மை மற்றும் பள்ளி செல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் பேசும் மொழிகளுக்கு அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆயிரம் வருடம் பழமையான மைதிலி(பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடியின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நதிநீர் இணைப்பு திட்டம்

நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடில்லி, ஆக. 4- நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, நாட்டின் முதல் நதி நீர் இணைப்புத் திட்டம் (கென் பெட்வா புராஜக்ட்) உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ஓடும் 16 ஆறுகளை இணைக்கும் வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இரு மாநிலங்களிடையே நதி நீரை பங்கீடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 30,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இந்தத் திட்டம் நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் என இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner