எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 4- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி அதற்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்காதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண் டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சபரி என்பவர் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது: அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் அர்ச் சகர் ஆகலாம் என்று கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அர சால் ஆணை வெளியிடப்பட் டது. இதன் படி அனைத்து பிரி வினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க 6 மய்யங்கள் அமைக் கப்பட்டன. அதில் நான்கு மய் யங்கள் சைவத்திற்கும், இரண்டு வைஷ்ணவத்திற்கும் ஒதுக்கப் பட்டன. இந்த மய்யங்களில் 2007--2008ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்தனர்.

அதில் நானும் ஒருவன். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு எனக்கு ஜூனியர் சைவ அர்ச்ச கருக்கான சான்றிதழ் வழங்கப் பட்டது. எனவே 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசா ணையின்படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை கோவில்களில் பணியமர்த்தியிருக்க வேண் டும். ஆனால் 208 பேரில் ஒரு வருக்குக் கூட இதுவரை பணி வழங்கப்படவில்லை. தமிழக அரசு கோவில்கள் அர்ச்சகர் பணிக்கு காலியாக உள்ள இடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அங்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு கோவில் கூட இது தொடர் பான அறிவிப்பை வெளியிட வில்லை. கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு மனுவை தமிழக அரசுக்கு நான் அளித்து இருந்தேன். அந்த மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தமிழகத்தில் ஒற்றை சன்னதி கொண்ட ஆகமக் கோவில்களின் பட்டியலை இரண்டு தமிழ் நாளிதழ்களில் வெளியிட உத்தரவிட வேண் டும். மேலும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நான் உட்பட 207 பேருக்கு பணி வழங்க உத்த ரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதி பதி வி.பார்த்திபன் இது தொடர் பாக இரண்டு வாரத்தில் தமி ழக அரசும், இந்து சமய அற நிலையத்துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner