எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக. 4- -காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கும் விஷயத்தில் மத்திய அரசு பின்வாங்கியது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசுகட்டாயம் பதிலளித்தாக வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக, 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தற்போது இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமி தவா ராய், ஏ.எம். கான் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் வழக்கை விசாரித்து வருகிறது. முதலில் கர்நாடக அரசும், அடுத்து கேரள அரசும் தத்தமதுவாதங்களை எடுத்து வைத்த நிலையில், புதனன்று தமிழக அரசுத் தர ப்பில், மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதத்தைத் துவக்கினார்.

அப்போது, காவிரி நதிநீர் தொடர்பான நீதிமன்ற உத்தர வுகளை கர்நாடகம் மீறுவதாக வும், தான் செய்வதே சரி என்ற போக்கில் கர்நாடகா செயல் படுவதாகவும் கூறினார். காவிரி பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசும் தனது கடமையை ஆற்ற வில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், வியாழக்கிழ மையன்றும் தனது வாதத்தைத் தொடர்ந்த சேகர் நாப்தே, காவிரிவிவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது என்றுவெளிப்படையான குற்றச் சாட்டை முன்வைத்தார்.காவிரி நீர் இல்லையெனில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற தமிழகத் தின் நியாயமான கோரிக்கையை ஏற்க நீதிமன்றமும், மத்திய அரசும்மறுத்து வருவதாகவும், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் அதிலி ருந்து பின்வாங்கி விட்டதாக வும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், மேலாண்மை வாரி யத்தை அமைப்பதற்கு முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் ஏன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கியது? என கேள்வி எழுப்பினர்.நீதிமன்றத் தில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜராகியிருந் தார். அவரிடம் தாங்கள் அவ் வப்போது எழுப்பும் கேள்வி களை குறித்துக் கொள்ளுமாறும், பின்னர் தங்களின் கேள்விக்கு உரிய விளக்கத்தை அளித்தே ஆக வேண்டும் என்றும் நீதி பதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, தமிழகத்தை கலந்து ஆலோசிக்காமல் கர்நா டக அரசு மேகதாது என்ற இடத் தில் புதிய அணை கட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்த நீதிபதி கள், கர்நாடக அரசு அணை கட்டுவதாக குற்றம்சாட்டும் தமிழக அரசு,தனது மாநிலத்தில் புதிய அணைகளை கட்டாதது ஏன்? என்ற கேள்வியை எழுப் பினர். அதற்குப் பதிலளித்த தமி ழக அரசு வழக்குரைஞர் புதிய அணைகளை கட்டும் அளவுக்கு தமிழகத்தில் புவியியல் அமைப்பு இல்லை என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner