எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஆக. 4- நாட்டில் அறி விக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது' என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிர சாத், பா.ஜ.க.,வை விமர்சித்து நீள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர் களை சந்தித்த லாலு தெரிவித் ததாவது: பெங்களூருவில் குஜ ராத் காங்., எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததற்காக கருநாடக காங்., அமைச்சர் வீடுகளில் மத்திய அரசு சோதனை நடத்து கிறது. அதானி போன்ற பெரு நிறுவனங்களை மத்திய அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? வெளிநாடுகளில் ரகசிய முத லீடு செய்ததாக பனாமா ஆவ ணங்களில் குறிப்பிட்டிருந்த, அய்ஸ்வர்யா ராய், ராமன் சிங் மகன், அமிதாப் பச்சன் உள் ளிட்ட 424 பேரின் வீடுகளில் சோதனை நடத்தாததன் கார ணம் என்ன?

நாட்டில், அறிவிக்கப்படாத, 75 சதவீத நெருக்கடி நிலை, அமலில் உள்ளது. எதிர்க்கட்சி களை ஒடுக்க, மத்திய அமைப் புகளை, மோடி அரசு, கைப் பாவையாக பயன்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.,வில் உள்ளவர் கள் மீது, பல்வேறு ஊழல் குற் றச்சாட்டுகள் இருந்தும், அவர் கள் சுதந்திரமாக வலம் வரு கின்றனர்.

வரும் 8ஆம் தேதி பீகார் வரும் சரத் யாதவ், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்த மாநிலங்களவைத் தேர் தலில் மோடியை எதிர்க்க உதவி செய்வார் எனும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner