எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிதிஷ்குமார் அமைச்சரவையில்

22 அமைச்சர்கள் மீது  குற்ற பின்னணி

புதிய ஆய்வில் தகவல்

பாட்னா, ஆக. 4- பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், லல்லு பிரசாத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதா வுடன் கூட்டணி சேர்ந்தார்.

சமீபத்தில் அய்க்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது. இரு கட்சிகளையும் சேர்ந்த 29 அமைச்சர்கள் பதவி ஏற்றார் கள். புதிய அமைச்சர்கள் பற்றி ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

தேர்தல் ஆணையத்தில் அவர் கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அடிப்படையில் அமைச் சர்களின் சொத்துப்பட்டியல், குற்றப்பின்னணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

76 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். அதன்படி மொத் தம் உள்ள 29 அமைச்சர்களில் 22 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, மோசடி, பெண்களுக்கு எதி ரான கொடுமை போன்ற குற் றச்சாட்டுகள் இடம் பெற்றுள் ளனர்.

72 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். பா.ஜனதா அமைச் சர் விஜய்குமார் சின்காவின் சொத்து ரூ. 15 கோடி, மற் றொருவரான சுரேஷ்குமாரின் சொத்து ரூ. 11 கோடி,. அய்க் கிய ஜனதா தளம் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் சொத்து ரூ. 5 கோடி.

மிகக் குறைந்த அளவாக பா.ஜனதா அமைச்சர்கள் மங் கள் பாண்டே, பிரிஜ் கிஷோர் பிந்த், பினோத்குமார் சிங் ஆகி யோரின் சொத்து முறையே ரூ. 49 லட்சம், ரூ. 52 லட்சம், ரூ. 67 லட்சம்.

9 அமைச்சர்கள் 8ஆ-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளனர்.


 

மதவெறியர்களின் ஆட்டம்

பீகாரிலும் தொடங்கியது

பசுமாட்டுக்கறி வைத்திருந்ததாக தாக்குதல்பாட்னா, ஆக. 4- பீகாரில் வியாழனன்று ஒரு டிரக்கில் பசு மாட்டுக்கறி கொண்டு சென்றார்கள் என்ற சந்தேகத் தின் பேரில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேரை அடித்துநொறுக்கினார்கள்.

இந்தச் சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 84இல் போஜ் பூர் மாவட்டத்தில் சாஹ்பூர் என்னுமிடத்தில் நடைபெற்று உள்ளது. பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஆட்கள் மேற்படி டிரக் கையும் தீ வைத்துக் கொளுத் திட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றதைத்தொடர்ந்து அது தடுத்துநிறுத்தப்பட்டது. காவல்துறையினர் மேற்படி மூவரையும் காவல்நிலையத் திற்கு அழைத்துச் சென்றுள்ள னர். டிரக் ஓட்டுநர், தாங்கள் காளை மாட்டுக் கறி எடுத்துச் சென்றதாக காவல்துறையின ரிடம் கூறியிருக்கிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அய்க்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள கால்நடைத்துறை அமைச்சர் பசுபதி குமார், மாநிலத்தில் இயங்கும் அனைத்து சட்ட விரோத இறைச்சிக்கூடங்க ளும் மூடப்படும் என்று அறிவித்திருந்தார். பாஜக மாநிலத் தில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இதுபோன்று பசு குண்டர்களின் வெறியாட்டங் களும், கொலைபாதக செயல் களும் வழக்கமான நடவடிக் கைகளாக மாறிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலை வர் ஒருவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner