எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நேர்மையான தேர்தல் மூலம் 2019ஆம் ஆண்டு வெற்றிபெற முடியாது என்ற காரணத்தால் இப்போதி ருந்தே தங்களுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒழித்துக்கட்டும் வேலையில் மோடி-அமித்ஷா கூட்டணி இறங்கியுள்ளது.

2004ஆம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற, "ஒளிமயமான இந்தியா" என்ற  கவர்ச்சி முழக்கத்தால் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி.யின் இந்துத்துவ ஆட்சியில் வெறுத்துப் போன மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.

ஆனால், 2014ஆம் ஆண்டு வளர்ச்சி என்ற கவர்ச் சியை மோடி மூலம் காட்டி, கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு இளைஞர்களை ஏமாற்றி பெரும் பான்மை இடங்களை பா.ஜக. வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், பதவியேற்ற நாள் முதலே பி.ஜே.பி. மத்திய அரசு செய்த மதவாத செயல்களும், சிறுபான்மையினர்க்கு எதிரான நடவடிக்கைகளும், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தின.

அந்த வெறுப்பின் விளைவாலும், லாலு - நிதிஷ் - காங்கிரஸ் கூட்டணியாலும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தோற்றனர்.

அடுத்து, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை, நீட் தேர்வு, சிறுபான்மையினர் மீது தாக்குதல், புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருத இந்தித் திணிப்பு, ஒற்றுமைக் கலாச்சாரம் உருவாக்கும் முயற்சி போன்றவற்றில் மக்கள் வெறுப்பின் உச்சத்திற்குச் சென்றுள்ளனர்.

பீகாரில் ஏற்பட்ட தோல்வியைத் தவிர்க்க, அந்நிலை யில் உ.பி. தேர்தல் வர, தங்களுக்கு எதிராக மகா கூட்டணி அமையாமல் பல சூழ்ச்சிகளை செய்து தடுத்ததோடு, சமாஜ்வாடி கட்சியையும் பிளந்தனர். சாதி அடிப்படை யில் வாக்கு வங்கி, தேர்தல் முறைகேடு என்று பலவற் றையும் செய்து தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றனர்.

உண்மையில் உ.பி.யில் பிஜேபிக்கு வாக்கு சதவீதம் குறைந்த போதிலும், எதிர் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி பெற்றனர். மாயாவதி ஓட்டையும் சேர்த்தால் பிஜேபி எல்லா இடங்களிலும் தோற்றிருக்கும் என்ற உண்மை வெளிப்பட்டது. உ.பி.யில் 23 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையை விட பதிவான வாக்கு எண்ணிக்கை அதிகம் இருந்ததால் தேர்தல் மோசடியும் வெளிப்பட்டது. அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை.

ஆக, தேர்தலில் முறைகேடு, எதிர்தரப்பை சிதறடித்தல் என்ற வியூகங்களின் மூலம் 2019 நாடாளுமன்றத் தேர் தலில் வெற்றி பெற மோடி - அமித்ஷா கூட்டணி வியூகம் வகுத்து செயல்படுகிறது.

அண்மையில் பீகார் அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும், தமிழகத்தில் நடந்து வருகின்ற உடைப்பு வேலைகளும், அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் அதிகார நடவடிக்கைகளும் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதும் இத்திட்டத்தின் விளைவுகள்தான்.

பி.ஜே.பிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்பட்ட நிதிஷ்குமாரையே நிலை தடுமாறச் செய்து நினைத்ததை முடித்து விட்டனர்.

பீகாரில் தற்போது நடந்திருப்பது மிக,மிக முக்கியமான அரசியல் மாற்றமாகும். 2019 - மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக,  இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில்  மாநிலக் கட்சிகள் வலிமையோடு இருக்கின்றனவோ, அவற்றைச் சிதறடித்து  2019இல் மக்களவைத் தேர்தலின் போது எந்த மாநிலத்திலும் தனி செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சி களோ அல்லது அத்தகைய கட்சிகளின் தலைவர்களோ அரசியலில் இல்லாது செய்து மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர்.

ஓடிசாவில் நீண்ட நாள்கள் ஆட்சியில் இருந்து வரும் பிஜூ ஜனதா தள முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பல விதமான அழுத்தங் களை மோடி அரசு கொடுத்து தங்களுடன் சேர நெருக்கு கிறது.

மேற்கு வங்கத்தில் எந்தளவுக்கு முடியுமோ அந்தள வுக்கு மம்தா பாஜனர்ஜி அரசுக்கு மறைமுகமான தொல் லைகள் தொய்வு இல்லாமல் கொடுக்கப்பட்டு வருகின் றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முக்கிய கட்சிகள் அனைத்தும் இன்று மோடியின் கைப் பாவைகளாக மாறி விட்டன. பல நூறு கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிபிஅய் விசாரணையை எதிர் கொண்டிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை மிரட்டி அடிபணிய வைத்துவிட்டார் மோடி! மோடியின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியை வெறுத்த  மக்கள்  2019ஆம் ஆண்டு  தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை மோடியும், அமித்ஷாவும் நன்கு அறிந்து, இனி நியாயமான தேர்தல் மூலம் மக்களைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் வரும்  2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தமக்கு எதிரான எந்த ஒரு எதிர்க்கட்சிகளுமே இல்லாத நிலையை உருவாக்கி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முயற்சிக்கின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் மக்களை இந்துத்துவ வெறிகொண்ட ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்க மோடிக்கு எதிராக   அமைக்கப் போகும் ஒற்றுமையான, வலுவான, எச்சரிக்கையான கூட்டணி யைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner