எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஆக. 4- தம்முடைய ஒன்பது நாள் குழந்தையின் சிறுநீரகத்தை கொடைய ளித்ததால் வேறு ஒரு 8 மாதக் குழந்தை உயிர் பிழைத்தது!

பிறந்து ஒன்பது நாளிலேயே மூளைச் சாவு அடைந்த ஒரு குழந்தையின் சிறு நீரகம்  வேறு ஒரு சிறுநீரகம் பழுதடைந்த குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

இறந்தவர்களின் உடலை எரிப் பதோ, புதைப்பதோ அவரவர்கள் வீட்டு வழக்கம்.  ஆனால் உடலிலுள்ள உறுப் புக்களை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்குவதை விட அதன் மூலம் இன்னொரு உயிரை வாழ வைப்பது மிகவும் பயனுள்ள வழக்கம்.  இந்த வழக்கத்தை பலரும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். சீனாவில் பிறந்து ஒன்பதே நாள்களான ஒரு குழந்தையின் சிறுநீரகம் கொடையளிக்கப்பட்டு உல கிலேயே மிகவும் “இளைய உடல் உறுப்பு கொடையாளர்” என்னும் பெரு மையை அந்தக் குழந்தை பெற்றுள்ளது.

ஜீவோ என்னும் சீனப் பெண் குன் மிங்கில் உள்ள தாய் சேய் நல விடுதியில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  குழந்தை பிறந்ததிலிருந்தே கடும் மூச் சுத் திணறலுடன் இருந்தது.  மருத்துவர் களின் முயற்சி எதுவும் பலன் தராமல் நான்கு தினங்கள் கோமா நிலையில் இருந்த அந்தக் குழந்தையின் மூளை செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.

கடும் துயரத்தில் இருந்த போதிலும் குழந்தையின் சிறுநீரகத்தை அளிக்க பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.  ஜீவோ வின் கணவர், ஒன்பது நாள்களே ஆனா லும் அவள் என் குழந்தை.  ஒரு குழந் தையை பிரியும் துயர் என்ன என்பதை அவள் எனக்கு உணர்த்தி விட்டாள்.  அதே துயரம் மற்றொரு பெற்றோருக்கு ஏற்படக்கூடாது என்பதாலும், இறந்தா லும் என் மகளுடைய உடல் உறுப்பா வது வாழட்டும் என்னும் எண்ணத்தா லும் இந்த கொடைக்கு நான் சம்மதித் துள்ளேன் என கண்ணீர் மல்கக் கூறினார்.

வூகான் என்னும் சீன நகரில் ஒரு எட்டுமாத ஆண் குழந்தை சீறுநீரகம் செயலிழந்து மரணப் படுக்கையில் இருந்தது.  இந்தப் பெண் குழந்தையி டம் இருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம், வூகான் நகருக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறுநீர கம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பொருத் தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த் திய டாக்டர் ஜோவோ யாங்கெங் சிறு நீரகம் நன்கு பொருந்தி விட்டதாகவும், வேலை செய்யத் துவங்கி விட்டதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தார். கடும் துயரத் திலும் மற்றவருக்கு உதவும் மனப் பான்மை கொண்ட அந்த பெற்றோரை சீன மக்கள் வாழ்த்துகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner