எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், ஆக. 5- கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி 19ஆம் தேதி அன்று தலையில் தேங்காய் உடைக்கும் மூடத்தனமான, மூட நம்பிக்கை நிகழ்ச்சி நடப்பது வழக்கமாம்.

கடந்த 2014ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலையில் தேங்காய் உடைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு, கரூர், திருச்சி, லால்குடி கழக மாவட்டங்கள் சேர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதின் விளைவாக பக் தர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து காணப்பட்டது.

பக்தைக்குப் படுகாயம்

மகாலட்சுமி கோயிலில் ஆயிரக்கணக்கா னோர் அளவில் தலையில் தேங்காய் உடைத்து வந்த பக்தர்கள் இந்த ஆண்டு 200க்கும் குறைந்த எண்ணிக்கையில் மூடத்தனமாக தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டனர். இந்த ஆண்டு மகேஸ்வரி (வயது 25), பெங்களூருவைச் சேர்ந்த இவர் தலையில் தேங்காய் உடைத்தபோது இரத்தம் பீறிட்டு வந்தது. உடனடியாக மஞ்சள், குங்குமம், சாம்பல் போன்றவற்றை தலையில் உடைந்த பகுதியில் அப்பிக்கொண்டார். மருத்துவ முகாமில் இவருக்கு 8 தையல் போடப்பட்டன. மகேஷ்வரி (வயது 27). பொள்ளாச்சியில் இருந்து வந்த இவருக்கு 6 தையல் போடப் பட்டு வலி தாங்க முடியாமல் கதறி அழுதார். உடனே அப்பா, அம்மா ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். கந்தசாமி (வயது 43) வையம்பட்டி. இவர் தலையில் தையல் போட வேண்டாம், சாமி குத்தம் ஆகிவிடும் என மூடத்தனமாக மறுத்தவரிடம் மருத்துவர்கள் தையல் போடவில்லையெனில் தலையில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லியதும் 6 தையல் போட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு 200 பேர் மண்டையில் உடைத்துக் கொண்டதில் 20க்கும் மேற்பட் டோர் மண்டை உடைந்தது. இதில் 7 பேர் மட்டுமே முதலுதவி சிகிச்சை மேற்கொண் டனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போதிய பக்தர்கள் வரத்து இல்லாத தால் பேருந்துகள் வெறிச்சோடின. குறைந்த எண்ணிக்கையில் பயணம் மேற்கொண்டனர்.

"விடுதலை" செய்தியின் எதிரொலியாக கோயிலுக்கு குறைந்த எண்ணிக்கையில் பக் தர்கள் வந்து கலந்து கொண்டனர். வெளியூர் களில்,  பொள்ளாச்சி, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து குறைந்த எண்ணிக்கை யில் பக்தர்கள் வந்திருந்தனர். "பக்தி வந்தால் புத்தி போகும்" என்பார்கள்.

பக்தர்களுக்கு இப்போதுதான் புத்தி வந்திருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner