எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஆக. 5- குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்கட்சி கள் சார்பில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி மோடி யின் ஆட்சியில் மதவெறி அதி கரித்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

டில்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது அவர் கூறுகை யில், நாட்டில் தற்போது மாடு விழிப்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு தேவைப்படு கிறது என்று முன்னாள் குடிய ரசுத்தலைவர் கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள கூடிய விஷ யம். நேரடி மற்றும் மறைமுக அடக்குமுறை, மதவெறி, சகிப்புதன்மையும் அதிகரிப்பது கவலை அளிக்கிறது.

இது ஜனநாயகமும் கிடை யாது, குடியரசும் கிடையாது. வாக்காளர்கள் தங்களது வாக்கை தகுதியானதாக ஆக்க வேண் டும் என்பதற்காக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். அதோடு பல கட்சிகளின் அழைப்பை ஏற்று குடியரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கத்தோடு போட்டியிடுகி றேன், எம்.பி.க்கள் எண்ணிக் கையில் வெற்றி வாய்ப்பு அதி கம் உள்ள வெங்கைய நாயுடு குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், "அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர். பொது விவகாரங்களில் நல்ல அனுபவம் கொணடவர். நான் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களி டம் வாக்கு கோரவில்லை. எனது தகுதியின் மீது கவனம் செலுத்துங்கள் என்றுதான் கேட்டுள்ளேன்.

என்னை எதிரியாக பார்க்க வேண்டாம். நாட்டின் இறை யாண்மை, பன்முகத்தன்மை, ஜனநாயக உரிமைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு குடிமகனுக்கு வாய்ப்பு வழங் கும்படிதான் கேட்டுள்ளேன். மதிப்பில்லாத வெற்றி, தோல் விக்கு மத்தியில் சில போட் டிகள் மதிப்புமிக்கதாக இருக் கும்" என்றார்.

தேர்தலில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறு கையில், "தேர்தல்களை விட வாழ்க்கை பெரியது" என்றார்.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு எதிர்கட்சிகளின் செயல்பாடு எப்படி உள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், மக்கள் இந்த வாய்ப்பை புத்திசாலித்தனமான முறையில் பயன்படுத்துவார் கள். சுதந்திரம் மற்றும் நேர் மையான முறையில் நடத்தப் படும் ஒவ்வொரு தேர்தலும் ஒரு வெற்றியே என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner