எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்காப்பூர், ஆக. 5 மகாராட் டிர மாநிலத்தில் கம்யூனிஸ்ட் தலைவரும் பகுத்தறிவாளருமா கிய கோவிந்த் பன்சாரே 2015 ஆம் ஆண்டில் இந்துத்துவ தீவி ரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். அக்கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள்குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்து உள்ளது.

2013ஆம் ஆண்டில் புனே வில் காலை நடைப்பயிற்சியின்போது, பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் 20.8.2013 அன்று சுடப்பட்டுக் கொல்லப் பட்டார். பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மும்பையில் 16.2.2015 அன்று அவர்தம் மனைவியுடன் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, சுடப்பட்டார்.  அவர் மனைவி உமாவும் படுகாயம் அடைந்தார். இருவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி கோவிந்த் பன்சாரே உயிரிழந்தார்.

கருநாடகா மாநிலத்தில், மேனாள் துணைவேந்தரும் பகுத்தறிவாளருமாகிய பேராசி ரியர் எம்.எம்.கல்புர்கி அவர்தம் வீட்டில் இருந்தபோது கதவு தட்டப்பட்டு, திறந்தபோது சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
பகுத்தறிவாளர்கள் மூவரும் ஒரே மாதிரியாகவே துப்பாக் கியால் சுட்டுக்கொல்லப்பட்ட னர். அம்மூவரும் கொலை செய்யப்பட்ட விதத்தில் உள்ள ஒற்றுமை, கொல்வதற்கு பயன் படுத்தப்பட்ட துப்பாக்கி என அனைத்திலும் இந்துத்துவா தீவி ரவாதிகள் திட்டமிட்டு கொலை களை செயல்படுத்தினார்கள்.

இவ்வழக்குகளில் குற்றவா ளிகள்மீது நடவடிக்கை எடுப் பது குறித்து வழக்கு விசாரணை யில் போதிய முன்னேற்றம் இல்லை என்று நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்தன. இந் நிலையில் சிறப்புப் புலனாய் வுக்குழு, மத்திய புலனாய்வுக் குழு விசாரணைகள் நடை பெற்று வருகின்றன.

பன்சாரே கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோர் குறித்து தக வல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்று மகாராட்டிர மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

பன்சாரே கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசா ரணை நடைபெற்று வந்த நிலை யில், இந்துத்துவா தீவிரவாதி களான சமீர் கெய்க்வாட், வீரேந்திரசிங் தாவடே ஆகி யோர் கைது செய்யப்பட்டார் கள்.

அதன்பிறகு, நான்கு மாதங் களில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்ற வாளிகளான அகோல்கர், பவார் ஆகியோர் குறித்த தகவல்களை அளிப்போருக்கு ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

கொல்காப்பூர் காவல்துறை அலுவலர் விஷ்வாஸ் நாங்கரே பாடீல் கூறுகையில், பன்சாரே கொலை வழக்கில் சிறப்புப்புல னாய்வுத்துறை குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்துள்ளது. பன்சாரே கொலை வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட் டத்தின் 73ஆவது பிரிவின்கீழ் அகோல்கர், பவாருக்கு எதிராக 13.7.2017 அன்று பிணையில்லா பிடியாணை பிறப்பிக்கப்பட் டது. தலைமறைவாகியுள்ள கொலையாளிகள்குறித்த தக வல்களைத் தெரிவிப்போருக்கு மகாராட்டிர மாநில காவல் துறை ரூ.10 லட்சம் அறிவித்து உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner