எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுதில்லி, ஆக. 6- கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி அரசின் வளர்ச்சிப் பணிகளை முடக்கும் நோக்கத்துடன் ஆர் எஸ்எஸ் அமைப்பும், பாஜக வும் இரட்டை வேடம் போட்டு வருகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்து உள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெள் ளியன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

கேரள தலைநகர் திருவ னந்த புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர் எஸ்எஸ், பாஜக ஊழியர்களி டையேயான சமீபத்திய சம்ப வங்கள் தொடர்பாக பாஜக தலைமை இரட்டை நாக்கில் பேசிக் கொண்டிருக்கிறது.

மோதல்களைத் தடுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கு மாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கோரியிருந்தார். கேரள முதல் வரும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல்தவிர்த்திடவும், அமைதியை உத்தர வாதப்படுத் தவும் வழிவகைகளை ஆராய்ந் திடுவதற்காக ஜூலை 31 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றின் மாநிலத் தலை வர்களின் கூட்டத்தினைக் கூட்டி யிருந்தார்.

மேற்படி கூட்டத்தில் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட் டன. இதேபோன்று மூன்று மாவட்டங்களில் கூட்டங்க ளைக் கூட்டிடவும் தீர்மானிக் கப்பட்டது. அக்கூட்டங்களும் நடத்தப்பட்டு, இருதரப்பிலும் மோதலைத் தவிர்த்திட உறு திகள் எடுத்துக்கொள்ளப்பட் டன.

அதனைத் தொடர்ந்து வன் முறையில் ஈடுபடுவோர் எவ ராக இருந்தாலும் அவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக் கையும் எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் 6 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் பாஜ கவின் மத்தியத் தலைமையும், மத்திய அமைச்சர் ஒருவரும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அடிப்படையற்ற மற்றும் ஒரு தலைப்பட்சமான புகார்களை எழுப்பி வருகிறார்கள்.

பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வரும் கேரள முதல்வரின் நட வடிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ஒரு நிலைப்பாட்டினை எடுத் திருக்கக் கூடிய அதே சமயத் தில், மற்றொரு அமைச்சரும், பாஜக தலைமையும் முரண் பட்ட நிலைப்பாட்டினை எடுத் திருக்கிறார்கள்.

இதிலிருந்து, மாநிலத்தில் அமைதியைக் கொணர வேண் டும் என்பதிலோ, பாஜக, -ஆர்எஸ்எஸ் அங்கே அரசியல் மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளி வாகத் தெரிகிறது.

2016 மே மாதத்தில் பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படத் தொடங்கிய நாளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பாஜக, ஆர்எஸ்எஸ் தாக் குதல் தொடுக்கத்தொடங்கிவிட் டது என்பதை நினைவு கூர்ந் திட வேண்டும். பினராயி விஜ யன் வெற்றி பெற்றதைக் கொண் டாடும் விதத்தில் அவரது தொகுதியில் நடைபெற்ற பேர ணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியர் ஒரு வர் கொல்லப்பட்டார். இடது ஜனநாயக முன்னணி அரசு அமைக்கப்பட்ட பின்னர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேரும் மற்றவர்களும் இதுவரை ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்களால் கொல்லப்பட்டிருக் கிறார்கள்.

மார்க்ஸ்ட் கட்சியின் 200க் கும் மேற்பட்ட ஊழியர்களும், ஆதரவாளர்களும், காயங்கள் அடைந்திருக்கிறார்கள். 165 வீடுகளும், 51 கட்சி அலுவல கங்களும் மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங் களும் தாக்கப்பட்டு, தீக்கிரை யாக்கப்பட்டு, இடித்துத் த¬ ரமட்ட மாக்கப்பட்டிருக்கின் றன. இவர்களின் சூழ்ச்சித் திட் டம் மிகவும் தெளிவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக ஆத் திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, பின்னர் மார்க் சிஸ்ட்கட்சி ஊழியர்கள்தான் வன்முறையில் ஈடுபடுகிறார் கள் என்று குய்யோ முறையோ என்று கூறிவிட்டு, இத்தகைய தாக்குதல்களை கேரள அர சாங்கம் தடுக்கவில்லை என்று கூறி அதன்மீது குற்றம் சுமத் துவதேயாகும்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய தேர் தல் அறிக்கையில் கூறியுள்ள படி மிகவும்ஆழமான முறை யில் வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், இத்த கைய அரசியல் வன்முறைக ளுக்கு யார் பொறுப்பு என்பதை கேரள மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

கேரளமக்கள் மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மிகவும்உயர்ந்த அளவில் பேணிப் பாதுகாத்திடுவதைத் தொடர்வதுடன், அமைதி மற் றும் இயல்பு வாழ்க்கைக்கு ஊறுவிளைவித்திடும் ஆர் எஸ்எஸ்- பாஜகவின் இழிமுயற் சிகளை, நிச்சயமாக முறியடித் திடுவார்கள். இவ்வாறு அரசி யல் தலைமைக் குழு அறிக் கையில் கூறியுள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner