எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஆக. 6- குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சித் தலைவர்கள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட் டம் நடத்தினர். இதற்கிடையே, பாஜ, ஆர்எஸ்எஸ்  தொண்டர் கள்தான் தன் மீது தாக்குதல் நடத்தியதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பார்வையிட்டார்.  பனாஸ்கந்த் மாவட்டத்தில் தனிரா என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை அவர் காரில் சென்றபோது, பாஜ மற் றும் ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்தவர் கள்  கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்து ராகுலின் கார் மீது பெரிய சிமென்ட் கல்வீசி தாக் குதல் நடத்தப்பட்டது.  இத னால், காரின் பக்கவாட்டு ஜன் னல் கண்ணாடி உடைந்து,  ராகுலின் பாதுகாப்புக்கு சென்ற வீரர் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து, ராகுல் தனது பயணத்தை பாதியி லேயே ரத்து செய்துவிட்டு திரும்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகுல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் தலை வர்கள் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர்  மோடியை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட் டம் நடத்தினர். இதனால், பல இடங்களில் பதற்றம் ஏற்பட் டது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் நேற்று (5.8.2017) அளித்த பேட்டியில், பாஜக, ஆர்எஸ்எஸ்.சை சேர்ந் தவர்கள்தான் நேற்று என் மீது கல்வீசி தாக்குதல்  நடத்தினர். பிரதமர் மோடியும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசி யல் நடத்தும்விதம் இதுதான். இதைத் தவிர வேறு எதை சொல்வது? ஆனால்,  இது போன்ற தாக்குதல்கள் எதுவும் மக்கள் சேவையாற்றுவதில் இருந்து காங்கிரசை தடுத்து விட முடியாது என்றார்.

இந்த தாக்குதலை பாஜ.வும் பிரதமர் மோடியும் கண்டிக்க வில்லையே? என்ற கேள் விக்கு, அவர்களே இதுபோன்ற செயல்களை செய்யும்போது,  எப்படி கண்டிப்பார்கள்? அவர் களின் சொந்த கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள்தானே இந்த தாக்குதலை நடத்தினார்கள்? என்றார் ராகுல். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட தகவலில், என் மீது கல்வீசியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாததை கண்டித்து போராட்டம  நடத் திய குஜராத் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வை என்னால் உணர முடிகிறது. ஆனால், இதுபோன்ற விஷ யங்களில் தனது சக்தியை  வீணாக்குவதை விடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறி வுறுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner