எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன: லாலு குற்றச்சாட்டு

பாட்னா, ஆக. 6- நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் 75 சதவீத எமர்ஜென்சி சூழலை உருவாக்கியுள்ள தாகவும், மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன் படுத்தப்படுவதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்  கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
மோடி ஆட்சியில் மத்திய புலனாய்வு அமைப்புகள் தவ

றாகப் பயன்படுத்தப்படுகின்றன. கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடக்கிறது. குஜராத் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் ரெய்டு நடக்கிறது. ஆனால் மபியில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அமைச்சர்களின் வீடுகளில் மட்டும் எவ்வித ரெய்டும் நடக்க வில்லை. காங்கிரசை மிரட்டுவதற்காக இந்த சோதனைகள் நடக்கின்றன. பாஜவில் உள்ள ஊழல்வாதிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. பனாமா லீக் விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங்கின் மகன் உள்பட பலரது பெயர்கள் பனாமா பட்டியலில் இடம் பெற்றிருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் தற்போது 75 சதவீத எமர்ஜென்சி சூழல் நிலவுகிறது. இவ்வாறு லாலு கூறினார்.

பாடங்களை, படக் காட்சிகளாகப் பார்க்க அனைத்து பள்ளிகளிலும் இமேஜ் பேங்க்

சென்னை, ஆக. 6- தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை உரு வாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடத்தப்பட்டது. 2ஆ-வது கூட்டம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. புதிய பாடத் திட்டம் குறித்து இதில் ஆலோசிக் கப்பட்டது. பின்னர் குழுத் தலை வர் எம்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

அடுத்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர் பிளஸ்2 வகுப்புக்கு வரும்போது, ஒட்டுமொத்தமாக சூழலே மாறியிருக்கும். அதைக் கருத்தில்கொண்டு பாடத்திட்டம் வடிவமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். காலத்துக் கேற்ப அவ்வப்போது பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும்.

மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது. ஆசிரியர்களுக்கு எந்தெந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை விளக்க அவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும். கல்லூரிகளுக்கு நாக் தரச்சான்று அளிப்பதுபோல அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் தரச்சான்று வழங்க அமைப்பு ஏற்படுத்தப்படும்.

படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக புத்தக வடிவ மைப்பு, படங்கள் இருக்கவேண்டும். கல்லணை தொடர்பான பாடத்தை மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்துக்கொள் வோம். இதற்காக, கல்லணையை நேரில் பார்க்க வாய்ப் பில்லை. எனவே, கல்லணை யின் படத்தைக் காட்டினால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள் வார்கள். பாடம் தொடர் பான படங்களை மாணவர்களுக்கு காட்ட அனைத்து பள்ளி களிலும் இமேஜ் பேங்க் ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப் படும். காட்சிப் பதிவுகளும் காட்டப்படும். இதற்கான தொழில்நுட்ப வசதிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும். முதலில் 3,000 அரசுப் பள்ளிகளில் இமேஜ் பேங்க் ஏற் படுத்தப்படும்.

பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்க இம்மாதத்தில் மதுரை (9ஆ-ம் தேதி), கோவை (11ஆ-ம் தேதி), சென்னை (22ஆ-ம் தேதி), தஞ்சாவூர் (24-ஆம் தேதி) ஆகிய பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படும். மாணவர்கள் எந்தவிதமான உயர் கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக 9ஆ-ம் வகுப்பு முதல் கவுன்சலிங் தரப்படும். அதில் புதிய படிப்புகள், புதிய கல்வி நிலையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி இறங்கி
அய்ந்து ஆண்டுகள் நிறைவு

வாஷிங்டன், ஆக. 6- செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மய்யம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. அது பல ஆண்டு பயணத்துக்கு பின் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் காலே கிரேடர் என்ற எரிமலையில் தரை இறங்கியது.

அதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, சுற்றுச்சூழல் தட்ப வெப்பநிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது ஒளிப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.

இந்த நிலையில் கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இன்றுடன் 5 ஆண்டுகளாகிறது. இத்தகவலை நாசா வெளியிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner