எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஆக. 7- கீழமை நீதிமன்றங் களில் காலியாக உள்ள இடங் களை நிரப்புவதற்கு, தேசிய அளவிலான நீதித்துறை சேவை என்ற தேர்வை நடத்தும் மத் திய அரசின் ஆலோசனைக்கு, பல்வேறு மாநில உயர்நீதிமன் றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு, 20 ஆயி ரத்து, 502 நீதிபதி பணியிடங் கள் நிர்ண யிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 2015 டிச., 31 நிலவரப்படி, 4,452 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந் தன. நீதிபதிகள் நியமனத்துக்கு அந்தந்த மாநில உயர்நீதிமன் றங்கள் தனித்தனியாக தேர்வு களை நடத்தி வருகின்றன. இந் நிலையில், கீழமை நீதிமன்றங் களில் காலியாகும் நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்து, மத்திய சட்ட அமைச் சகம், பல்வேறு பரிந்துரைகளை, உச்சநீதிமன்றத்துக்கு வழங்கி யது.

இது தொடர்பாக, மாநில உயர்நீதிமன்றங்களின் ஆலோ சனைகளை, உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. அதன் படி, உயர் நீதிமன்றங்கள் அளித்துள்ள பரிந்துரைகளை, மத்திய சட்ட அமைச்சகம் தொகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய நீதித் துறை சேவை முறையை அறிமுகம் செய்வ தற்கு, சிக்கிம் மற்றும் திரிபுரா உயர்நீதிமன்றங்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து

உள்ளன. ஆந்திரா, மும்பை, டில்லி, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பாட்னா, பஞ்சாப் - அரியானா ஆகியவை, இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner