எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- குடந்தை கருணா -

பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான வழி முறைகளை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளித்திட 20.12.1978 அன்று ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தை பீகார் முன்னாள் முதல்வர் பி.பி.மண் டல் தலைமையில் அமைத்தது.

ஆணையம் தனது அறிக் கையை 31.12.1980 அன்று அன் றைய பிரதமர் இந்திரா காந்தி யிடம் அளித்தது. ஆனால் பிரத மர்களாக பதவி வகித்த இந் திரா காந்தியும், பின்பு ராஜீவ் காந்தியும், மண்டல் அளித்த அறிக்கையை நடைமுறைப் படுத்தவில்லை.

மண்டல் அறிக்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படாத நிலை யில், சமூக அமைப்புகள் பல் வேறு போராட்டங்களையும், கோரிக்கைகளையும் நடத்தின. பெரியார் இயக்கமான திரா விடர் கழகம், நாற்பத்திரெண்டு மாநாடுகளையும், பதினாறு போராட்டங்களையும் நடத்தி யது.

1990-ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு வழங்கிடும் ஆணையை நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது தேசிய முன்னணி அர சின் சார்பாக அறிவித்தார்.

இந்த ஆணை, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தனிப்பெரும் தலைவர் பெரி யார் ஈ.வெ.ராமசாமி, டாக் டர் ராம் மனோகர் லோகியா ஆகி யோரது கனவை நனவாக்கும் செயல் என பெருமையுடன் குறிப்பிட்டார் வி.பி.சிங்.

உயர் ஜாதி ஆதிக்கம் நிறைந்த ஊடகத்துறை இன்றும், வி.பி. சிங் அவர்களை ஒரு சந்தர்ப்ப வாதி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தியவர் என்று ஒரு வில்லனைப்போலத்தானே சித் தரிக்கிறது. அவரது மறை வைக்கூட வெளிப்படுத்தாமல் தங்களது குரூரத் தன்மையை வெளிக்காட்டியவர்கள் தானே இந்த ஊடகத்துறையாளர்கள். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் குழு பரிந் துரைகளை நிறைவேற்றுவோம் என்று தங்களது தேர்தல் அறிக் கையில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அறிவித்தது. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத்தான் வி.பி.சிங் நிறைவேற்றினார். அதனால் தான், வி.பி.சிங் அவர்களை, சமூக நீதியின் காவலர் என பெரியார் இயக்கம் கூறியது; இன்றும் கூறி வருகிறது.

மண்டல் குழு பரிந்துரையினை நிறைவேற்றும் ஆணையை 1990-இல் வி.பி.சிங் அறிவித்த பின்னர்தான், பிற்ப டுத்தப்பட்ட சமுதாயத் தலை வர்களின் முகங்கள் மக்களி டையே தெரிவதற்கு ஒரு துவக் கம் ஏற்பட்டது. அதுவரை உயர் ஜாதியினர் மட்டுமே முதல்வ ராக முடியும் என்பதை முறிய டித்து, குறிப்பாக வட நாட்டில், முதல்வர்களாக அமர முடிந் தது.

நாட்டின் 50 விழுக்காட்டிற்கு மேல் மக்கள் தொகையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாய மக்களுக்கு அரசியல் அமைப் புப்படியான ஒரு அறிக்கையை நிறைவேற்றியதற்காக மான மிகு வி.பி.சிங் அவர்களுக்கு பிரதமர் பதவியை இழக்கும் ஓர் அவலம் ஏற்பட்டது.

இன்றைக்கு சமூக நீதித் தலைவர்கள் என்று கூறிக்கொள் ளும் தலைவர்கள், விபிசிங் அறி விப்பால் அறிமுகமானவர்கள்; அவருக்காக வாதாட வரவில்லை. அவரால் பதவியை அனுபவித் தவர்கள், அவரது பெயரைக்கூட உச்சரிப்பதில்லை. இது பிற் படுத்தப்பட்டோர் இயக்கத் திற்கு உள்ள ஒரு துயரம் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் மட்டும்தான், விபிசிங் அவர்களை சமூக நீதிக் காவலர் என ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பிற்படுத் தப்பட்ட மக்கள் கருதுகிறார் கள்.

வி.பி.சிங் பற்றிய ஆளு மையை மக்களிடயே நல்ல வண்ணம் தமிழகத்தில் எடுத் துக் கூறியதில் பெரியார் இயக் கத்திற்கும், அரசியல் கட்சி என்கிற முறையில் திமுகவிற் கும் பெரும்பங்கு உண்டு.

ஆகஸ்டு 7-ஆம் தேதி ஆகிய இந்நாளில், பிற்படுத்தப்பட் டோர் உரிமைக்காக பிரதமர் பதவியைத் துறந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை நினைவு கூறுவோம். இட ஒதுக்கீட்டினை ஒழித்துக்கட்ட குழி தோண்டும் சக்திகளை தடுத்திட பிற்படுத்தபட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் விழிப்புடன் இருப்போம். மண்டல் குழு பரிந்துரையினை முழுவதும் நிறைவேற்றிட ஒன்றிணைந்து போராடுவோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner