எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தஞ்சாவூர், ஆக.8  கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், ராகு கோவில் உள்ளது.

இக்கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டி ருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை தூக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண் ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன.

மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. 'உண்டியலில் யாராவது ஊது பத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

கோயில் உண்டியல்
உடைத்து திருட்டு

புதுச்சேரி, ஆக.8  புதுச்சேரி காராமணிக்குப்பம் அம்மன், விநாயகர் கோயில்களில் உண்டியல்களை உடைத்து சில நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.

புதுவை காராமணிக்குப்பம் புவன்கரே வீதியில் உள்ள சிவசுப்பிரமணியர் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக விநாயகர், அங்காளபரமேஸ்வரி, முத்து மாரியம்மன் ஆகிய கோயில்கள் அருகருகே உள்ளது. ஆடிமாதம் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததாம்!

இதனால் கோயில் உண்டியலில் காணிக்கையும் பக்தர்கள் அதிகம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கோயில்களின் நடை மூடப்பட்டது. மறுநாள் காலை முத்துமாரியம்மன் கோயிலை திறக்க வந்த நிர்வாகி கணேசன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைத்து அதில் இருந்த பணம் காணாமல் போய் இருந்தது. அவர் கோயிலின் மற்ற நிர்வாகிகளை அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே அங்காளம்மன் கோயில், விநாயகர் கோயில் ஆகிய கோயில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உதவி ஆய்வாளர் சாரங்கபாணி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா சில நாட்களுக்கு முன்னர் பழுதடைந்திருந்ததால் உண்டி யலை திருடியவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உண்டியலை உடைத்து திருடியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner