எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கடந்த ஆறுமாதங்களாக தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி சீர்குலைந்த ஆட்சியாகவும், வெறும் காட்சியாகவும் இருக்கிறது என்பது பற்றி ஊடகங்கள் வாயிலாக வெளி மாநிலத்தவர், வெளிநாட்டவர் கேட்கும் கேள்விகள் நம்மைத் தலைகுனிய வைக்கின்றது!

மத்தியில் உள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு - தமிழ்நாட்டில் அணி அணியாக உள்ளவர்களைப் பிரித்தாண்டு, வருமான வரித்துறையையும் ஓர் ஆயுதமாக்கியுள்ள நிலை வேதனையையும் வெட்கத்தினையும் வாரி வீசிக் கொண்டுள்ளது!

இந்நிலையில் உருப்படியான சில பணிகளாவது நடைபெற்றுள்ளன என்பதற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையே சான்று ஆகும்.

அதற்கு முழுமுதற்காரணம் நேர்மையும் செயல் திறனும் தொலைநோக்கு சமுதாயப் பார்வையும் கொண்டு செயல்படும் அதன் ஆற்றல் மிகு செயலாளர் உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்களேயாகும்.

அவரை மாற்றிவிட திட்டங்கள் திரை மறைவில் உருவாகி வருவதாகச் செய்திகள் வருவது ஏற்புடையதல்ல.

தமிழக முதல்வர் பெயர் இதில் அடிபடுவது சரியா? இது உண்மையாக இருக்கக்கூடாது.

திரு. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அப்பதவியில் தொடர்ந்தால்தான், தமிழக அரசின் கெட்டப் பெயராவது சற்றுக் குறைய வாய்ப்புண்டு.

சென்னை                                                                                                              தலைவர்
8-8-2017                                                                                                           திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner