எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேரன்புப் பெரியார் பெருந்தொண்டர்களே, தோழர்களே, நண்பர்களே!

உங்கள் அனைவரையும் ஜெர் மனியில்  வரவேற்று, அளவளாவி மகிழ்ந்ததை வாழ்வில் மறக்க இயலாது. நமது இயக்கத்தின் கட்டுக் கோப்பு காத்து தினமும் மாநாட்டிற்கும், உணவுக்கும் நடக்க வேண்டியிருந் ததையும் மற்ற எதனையும் கண்டு கொள்ளாது, குறிக்கோளிலேயே கண் ணாக இருந்து நேரத்தில் சரியாக நடத்த ஒத்துழைத்த உங்கள் எடுத்துக் காட்டைப் பாராட்டு கின்றோம். வேறு யாராலும் முடியாதது நம்மால் முடியும் என்பதைக் காட்டிவிட்டோம்!

அம்மையார் பேராசியர் உல்ரிக் நிக்லஸ் மற்றும் சுவென், கிளாடியா, தேசிகன் நம்மால் மறக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் நம் உள்ள உணர்வை முழுவதும் வெளிப்படுத்த முடியாது.

ஒருங்கிணைப்பாளராக அயராது உழைத்த மானமிகு. வீ.குமரேசன் அவர்கள் நம்அனைவரின் பாராட்டிற்கு உரியவர்.எளிமை,இனிமை காரியத்தில் கண் என்று இமயம் ஏறி விட்டார். வாழ்க அவர் நலமுடன் வளர்க அவர் தொண்டு!

உடன் பணி செய்த அருமை நண்பர் இலக்குவன் தமிழ் அவர்கட்கும் மற்ற நண்பர்கட்கும் நன்றி.

குறைகளைப் பொறுத்தருள்வீர், மனதில் இனிய நினைவுகள் ஆக்கபூர்வப் பணிகளுக்கு வித்திட்டு நம் பணி மானமிகு ஆசிரியர் அவர்கள் வழி காட்டுதலுடன் தொடரட்டும்.

மாநாட்டிற்கு வந்திருந்த இளைய தலைமுறை செர்மனியிலும், லண்டனிலும் கிளை தொடங்க ஆயத்தமாகி விட்டனர். நமது பணி தொடரும்.

மீண்டும் சந்திப்போம்

சோம.இளங்கோவன் (இயக்குநர்)

பெரியார் பன்னாட்டமைப்பு,அமெரிக்கா.

பி.கு: தமிழகத்தில் ஆகும் செலவிற்கு நன்கொடை அளித்தவர் கட்கு நன்றி. அனுப்பாதவர்கள் முடிந்ததை உடன் அனுப்பிட வேண்டுகின்றோம்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner