எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவனந்தபுரம், ஆக. 8 -கேரளத்தில் பாஜக மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு இருக்கிறதுஎன்று உளவுத்துறை அறிக்கை அளித்தி ருப்பதாக, கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.

கேரள சட்டப்பேரவையில் திங்களன்று பேசிய பினராயி விஜயன், கேரளத் திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுத் தருவதில், பாஜக தலைவர்கள்செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வெளியுலகுக்கு தெரியவந்த நிலையில், அதை மறைப்பதற்காகவே அவர்கள் இந்த வன்முறைக்கு திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner