எழுத்துரு அளவு Larger Font Smaller Font



சென்னை, ஜூலை 8 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா வுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி ஜூலை 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், ஒரு கோடி மாணவர்கள், அஞ்சலட்டை, மின்னஞ்சல்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப் புவது எனவும் கடந்த 4.7.2017ல் நடைபெற்ற ஜனநாயக உரி மைப் பாதுகாப்புக் கூட்டமைப் பின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நுழைவுத் தேர்வு இன்றி +2 மதிப்பெண்கள் அடிப்படை யில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதால் பல ஆண்டுகாலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாண வர்களுக்கு வாய்ப்புக் கிடைத்து அவர்கள் மருத்துவக் கல் வியைப் பயின்று இன்று மருத் துவர்களாக சிறப்பாக சேவை யாற்றி வருகின்றனர்.

ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர் களின் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பறிக் கவும், தமிழகத்தில் தழைத்து நிற்கும் சமூகநீதி கொள்கைக்கு முடிவு கட்டவுமே நீட் தேர்வு மத்திய பாஜக தலைமையி லான மக்கள் விரோத அரசால் கெண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற தேர்வுகளால் சமூகநீதி குலை யாமல் பாதுகாத்திட கடந்த 27.03.2017 அன்று பெரியார் திட லில் கூடி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் மனிதநேய மக்கள் கட்சியும் பங்கு பெற் றுள்ளது.

நீட்' தேர்வை ஒட்டுமொத்த மாகவே ரத்து செய்துவிட்டு, +2 தேர்வில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு மாண வர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் 2016ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்த அந்தப் பழைய நிலை தொடர தேவையான சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறை வேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும், தமிழ்நாடு அரசின் மருத் துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத் திடும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிட வேண்டும்.

ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்பு தலைப் பெற்றிட பேரழுத்தம் கொடுக்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக ஜூலை 12 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் பெருந் திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத் திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரி விக்கிறது. இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகேள் விடுக்கின்றது. எமது ஆதரவு மாணவ இயக்கமான சமூக நீதி மாணவர் இயக்கமும் இந்த பெருந்திரள் எழுச்சி ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறேம். 

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner