எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் தெரிவித்திருப்பதாவது:

திராவிடர் கழகம் ஏற்பாட் டில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘நீட்’ தேர்வு முறையால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற் றும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு பெருமளவில் பறிக்கப்பட்டுள் ளதை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டில் 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர். இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூட இல்லை என்பது ‘நீட்’ தேர்வால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 12.07.2017 புதன் கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜனநாயக உரிமைப் பாதுகாப் புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி களின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner