எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்கள் ஆணையம் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக. 9- அரியானாவில் காரில் சென்ற பெண்ணை மடக்கி பாஜ தலைவர் மகன் கடத்த முயன்ற சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய பெண்கள் உரிமை ஆணையம் வலியுறுத்தியுள் ளது. அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலை மையிலான பாஜ ஆட்சி நடை பெற்று வருகிறது.

இங்கு சுற்றுலாத்துறை செய லாளராக இருப்பவர் அய்ஏஎஸ் அதிகாரி வரீந்தர் சிங் குன்டு. இவரது மகள் வர்னிகா. இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 4ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு இரவில் தனது காரில் திரும்பிய அவரை பாஜ மாநில தலைவர் சுபாஷ் பராலா மகன் விகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆசிஷ்குமார் ஆகியோர் மற்றொரு காரில் துரத்திச் சென்று வர்னிகாவை மடக்கி கடத்த முயன்றனர். அதற்குள் காவல்துறையின ருக்கு தகவல் செல்லவே, சரி யான நேரத்தில் வந்து வர்னி காவை மீட்டுள்ளனர்.

பின்னர் விசாரணையில் விகாஷ், பாஜ தலைவர் மகன் என்பது தெரியவந்ததும் விசா ரணை தொய்வடைய தொடங் கியது. சரியான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது தொடர் பாக ஆய்வு செய்து வருகிறோம் என்றார் காவல்துறை அதிகாரி. இதுகுறித்து கேட்ட போது, வழி யில் உள்ள எந்த கேமராவும் வேலை செய்யவில்லை என் றும், அவை வருடாந்திர பராம ரிப்பு முடிந்து விட்டதால் செயல் இழந்த நிலையில் உள்ளது என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் எஸ்பி சஷாங் ஆனந்த் ஓட்டம் பிடித்தார். நாங்கள் திறந்த மனதுடன் விசாரிக்கிறோம் என்று சமரசம் செய்தார். இதற்கிடையில் பாஜ தலைவர் மகனை பாதுகாக்க சண்டிகர் காவல் துறை துடிக் கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறு கையில், சண்டிகர் காவல்துறையினர் பாஜ தலைவர் மகன் விகாஷை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வரு கின்றனர்.

வழக்கு பதிவு செய்வதற்கு முன்னதாகவே கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் எப் படி மறைந்தன?  பாஜ தலை வர் மகனை காப்பாற்றுவதற்காக அது மத்திய அரசுக்கு அனுப் பப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத் தில் வெளிப்படையான விசா ரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய பெண்கள் உரிமை ஆணையம் வலியுறுத்தியுள் ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner