எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, ஆக. 9- பீகார் மாநிலத் தில் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட் டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

மறுநாளே, பா.ஜ.க. ஆதரவுடன் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் மீண் டும் பதவியேற்றார். நிதிஷ் குமார் முதல் அமைச்ச ராகவும் பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல் அமைச் சராகவும் பொறுப் பேற்று கொண்டனர். இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்துவந்த ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், நிதிஷ் குமாரின் முடிவு அரசியல் தற்கொலைக்கு சமமா னது என தற்போது குறிப்பிட்டுள்ளார்.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று செய்தி யாளர்களுக்கு பேட்டிய ளித்த லாலு பிரசாத் கூறியதாவது:-

அரசியலில் என்னைவிட அனுபவ சாலி என்று நிதிஷ் குமாரை நான் கருதி வந்தேன். எனது கருத்து தவறானது என் பதை அவர் நிரூபித்து விட் டார். அவ ருக்காக நான் வருத் தப்படுகிறேன்.

பா.ஜ.க.வுடன் கைகோர்த்து அவர் அரசியல் தற்கொலை செய்து கொண்டார். அரசியல் ரீதியாக அவரது கதை முடிந் தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அய்க்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றிபெறப் போவதில்லை. தந்திரவாதியாகவும் போர்க்களத்தை விட்டு பயந்து ஓடும் சுபாவம் கொண்டவரு மான நிதிஷ் குமாரை இனி எந்த அரசியல் கட்சியும் நம் பாது என்று கூறினார் லாலு பிரசாத்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner